புதுடில்லி, ஆக. 3- மத்தியப்பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் மக்களவை தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் அனில் பிரோஜியா. பிரதமர் மோடியைச் சந்திப் பதற்காக இவர் தனது மனைவி, மகளை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தார்.
மோடியை அவர்கள் சந்தித்த போது, அனிலின் 8 வயது மகள் ஆஹானாவிடம், "நான் யார் என்று தெரியுமா?” என மோடி கேட்டார். அதற்கு அந்த சிறுமி, “தெரியுமே.... நீங்கள்தான் மோடிஜி. உங்களை எனக்கு நன் றாக தெரியும். நீங்கள் டிவி.யில் தானே வேலை பார்க்கிறீர்கள்...” என்று கேட்டாள். இதைக் கேட்டுச் சிரித்த மோடி. சிறுமிக்கு சாக்லேட்டுகளை கொடுத்து அனுப்பினார்.
No comments:
Post a Comment