மதுரை, ஆக.2 மதுரை பழங்காநத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி என்று அம்மனுக்கு கூழ் காய்ச்சியபோது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த கோவிலில் கடந்த 29.7.2022 அன்று பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கிய பொருட் களை வைத்து அம்மனுக்கு கூழ் காய்ச்சும் பணி நடைபெற்றது.
அப்போது முத்துக்குமார் என்கின்ற முருகனுக்கு எதிர்பாராதவிதமாக வலிப்பு வந்ததால் நிலைதடுமாறி கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்தார். அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 65 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் இருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
No comments:
Post a Comment