ஒடுக்கப்பட்டவர்களின் கலங்கரை விளக்கம் தான் பெரியார் சிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

ஒடுக்கப்பட்டவர்களின் கலங்கரை விளக்கம் தான் பெரியார் சிலை

சிறீரங்கம் கோவில் வாசலில் இருக்கும் பெரியார் சிலையைப் பற்றி இதுவரை இப்படியான கோணத்தில் வேறு எவர் எழுதியும் நான் வாசித்ததேயில்லை...

அண்ணன்  Kathiravan Nachiappan  தன் இந்தப் பதிவின் மூலமாக வெளுத்து விட்டிருக்கிறார்.

"அப்பல்லாம் வீட்டுல கரி அடுப்பும்,மண்ணெண்ணெய் ஸ்டவ்வும் தான் புழக்கத்தில் இருக்கும்...மண்ணெண்ணெய் ரேசனில் வாங்குவது சிரமம்..ஒரு கார்டுக்கு 5 லிட்டர் தான் ஊத்துவாய்ங்க.. அதனால பத்தும் பத்தாதற்கு கரி அடுப்பு தான்..நான் தான் பதின்ம வயதுகளில் காலங்கார்த்தால போயி வாங்கி வருவேன்..அடுப்புக்கரிக்கடை  'சொக்கப்ப நாயக்கன் தெரு' வுல இருந்தது..

கரிக்கடைக்கு முன்னாடி இருக்கும் பிள்ளையார் கோயிலின் காம்பவுண்டு சுவரை ஒட்டி ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந் திருப்பான்..ஆளை பார்க்கவே  கொடூரமாக இருப்பான்..மீனாட்சியம்மன் கோயிலுக்கு போகவும்,வரவு மாக இருக்கும் பக்தர்களிடம் அதிகாரமாக பிச்சை கேட்பான்.

அந்தப் பிச்சைக்காரப் பயலுக்கு என்னைப் பார்த்தால் எப்படியிருக்குமோ?நான் தூரத்தில் வருவதைப் பார்த்ததுமே கத்துவான்..விடிந்தும் விடியாத பொழுதுகளில்,ஆள் நடமாட்ட மற்ற அந்த நேரத்தில்  எனக்கு குலை பதறும்...

கண்ணை உருட்டி,நாக்கை கடிச்சுகிட்டு பயமுறுத்து வான்..அது சின்ன தெரு தான்..அவனைத் தாண்டும் போது நான் நாலுகால் பாய்ச்சலில் ஓடுவேன்..போகப் போக கம்பை நீட்டி என்னை அடிக்க எத்தனிப்பான்..நான் எதிரில் இருக் கும் வீடு,கடைகளின் வாசல் படிகள் மீது ஏறி ஓடுவேன்..

பலநாளு கரிவாங்கிட்டு, கண்கலங்கிட்டே வரும் என்னைப் பார்த்து,"என்ன விசயம்டா"ன்னு அம்மா கேட்க,நான் விச யத்தை சொல்லவும், "அந்த பிச்சைக்கார xxxxxxx குடிக்கிக்கு என்னவாம்"னு கேட்டதோடு விட் டுட்டு வேலையை பார்க்க ஆரம்பிச்சிருவாங்க..

ஒன் ஃபைன் டே...வழக்கம்போல நான் கரிப் பைய தூக்கிட்டு அந்த தெருக்குள்ள நுழையும் போது,வழக்கத்திற்கு மாறாக பிச்சைக்காரன் கல்லை எறிய ஆரம்பித்தான்..நான் அவனைத் தாண்ட பயந்துகிட்டு, அழுதுகிட்டே கரி வாங்காமல் வீடு திரும்பினேன்.

நல் ஊழாக வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த அப்பா,நடந்த விசயத்தை என்னிடம் கேட்க,நானும் ஆதி முதல் அந்தம் வரை எனக்கும் பிச்சைக்கார சாருக்கும் இடையில் நடந்தவற்றை ஒப்பித்தேன்.அப்பா அமைதியாக, "நீ திரும்ப  கடைக்கு போப்பா"ன்னாங்க..நான் கை,கால் உதற முன்னால போனேன்..எனக்கு பின்னாடி சற்று தள்ளி அமைதியாக நடந்து வருவது எங்கப்பா தான்னு அந்த பேப்பயலுக்கு தெரியல..

பின்னாடி அப்பா வரும் தைரியத்தில் நான் அவன் பக்கத்தி லேயே நடந்தேன்..திரும்ப என்னைப் பார்த்த ஆத்திரத்தில்,பெருங் கூச்சலுடன் கம்பை எடுத்து ஓங்கினான்..அவ்வளவு தான்..எங்கப்பாவுக்கு அவ்வளவு கோபம் வரும்னே அப்பத் தான் தெரியும் எனக்கு..

"ஏன்டா xxxxxx ஓசிச் சோத்தை தின்னுட்டு ஒழுங்கா உட்காராமல் எம் பிள்ளை கூடவா ஒரண்டை இழுக்குற" ன்னு சத்தம் போட்டதோடு,அவன் கையில இருந்த கம்பை பிடுங்கி அவனை ஒரே அடி தான்..அவன் முழங்காலோ, கையோ எலும்பில் அடி விழுந்த சத்தம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கு..

நான் கரி வாங்கிட்டு திரும்பும் போது கண்டது கண் கொள்ளா காட்சி..அப்பா பிள்ளையார் கோயில் வாசப்படியில் கம்புடன்  உட்கார்ந்திருக்க,பக்கத்தில் விரித்த அழுக்கு சாக்கில் மண்டி போட்டு அந்த பிச்சைக்கார மகான் தலை குனிந்திருந்தாரு..அதற்குப் பிறகு வெகு காலம் நான் அந்த வழியாக வெள்ளியம்பலம் ஸ்கூலுக்கு போகையில என்னை பார்த்து கூழைக் கும்பிடு போடுவாரு..

எனக்கு ஒண்ணுன்னா என்னைப் பெற்ற தந்தை வந்து நின்றதிலும்,நியாயம் கேட்டதிலும் ஆச்சரியம் ஒன்று மில்லை.. ஆனால் தனக்கு எந்த ரத்த சம்பந்தமும் இல்லாத வர்களை,ஏன் தன் சாதியில் கூடப் பிறக்காதவர்களை,கோயிலுக்குள் விட மாட்டேன்னு சொல்வது எவனா இருந்தாலும் சரி..ஏன்  கடவுளாவே இருந்தாலும் சரி,நான் அதனை எதிர்ப் பேன்டான்னு வந்து நின்னதால தான் அவர் நம் இனத்துக்கே 'தந்தை பெரியார்'..

"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு..நீ மனிதன்..உனக்கு கடவுள் நம்பிக்கையிருந்தால்,சாமி கும்பிட நீ தைரி யமா உள்ளே போ...உன் ஜாதியைச் சொல்லி எவனாவது தடுத்தால் எங்கப்பன் வாசலில் தான் தடியோடு உட்கார்ந் திருக்கான்"னு சொல்லுன்னு, ஜாதியால் ஒடுக்கப்பட்டவர் களுக்கு வழி காட்டும் கலங்கரை விளக்கம் தான் பெரியார் சிலை..

ஒத்தையில வந்திருக்கும் வேங்கையன் மவனைத் தானே பார்த்திருக்கீங்க...

ஒத்தையில குந்தியிருக்கும் அந்த  வேங்கையனே எங்க கிழவன் தான்டா..."

முகநூலிலிருந்து...


No comments:

Post a Comment