திருச்சியில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

திருச்சியில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி

 

தமிழர் தலைவர் ஆணைக்கிணங்க விடுதலை சந்தா தாரீர் என்கிற பதாகை பிடித்து - தந்தை பெரியாரால் துவங்கி வைக்கப்பட்ட விடுதலை பத்திரிகைக்கு ஆசிரியராக பொறுப்பேற்று 60 ஆண்டுகளை குறிக்கும் வண்ணம் 60 ஆயிரம் விடுதலை சந்தா சேர்க்க தோழர்கள் முடிவு எடுத்ததின் பேரில் திருச்சி மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தலைமையில் ஜெயில் பேட்டை பகுதி தலைவர் தமிழ்மணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மகாமணி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சங்கீதா, மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் வசந்தி, மகளிர் அணி அமுதா,மாநகர அமைப்பாளர் காட்டூர் கனகராஜ், காட்டூர் கிளை கழக செயலாளர் சங்கிலி முத்து, திருவரங்கம் பகுதி செயலாளர் முருகன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் அறிவுச்சுடர், மார்க்கெட் பகுதி செயலாளர் நேதாஜி, திருவரங்கம் பெரியார் படிப்பக பொன்னுசாமி, ஆகியோர் அடங்கிய குழு திருச்சியில் தமிழர் தலைவர் ஆலோசனையின் பேரில் முக்கிய இடமான ஜெயில் பேட்டை இரும்பு கடை வீதியில் இருந்து விடுதலை சந்தா சேர்ப்பு பணியை துவங்கி மதுரை சாலை வரை கடைக்கு கடை துண்டு பிரசுரம் கொடுத்து விடுதலையின் இதுவரையிலான செயல்பாடுகள் குறித்தும் இனி சமுதாயத்திற்கு ஆற்றப் போகிற சமூகப் பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது - கவனமாக கேட்டனர் அதில் மூன்று 3 அரையாண்டு சந்தாவும்,  1330 ரூபாய் கடைவீதி வசூலும் செய்யப்பட்டது.


No comments:

Post a Comment