இந்தியாவில் முதல் முறையாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் தாய்-சேய் இணை சிகிச்சைப் பிரிவு தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

இந்தியாவில் முதல் முறையாக எழும்பூர் அரசு மருத்துவமனையில் தாய்-சேய் இணை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சென்னை, ஆக. 3- இந்தியா வில் முதல் முறையாக எழும்பூர்அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் தாய்-சேய் இணை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவிலான தாய்-சேய் இணை சிகிச் சைப் பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனைப் பிரிவு, கலையரங்கம் ஆகிய வற்றை மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார். எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், தேசிய நல வாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனை டீன் தேரணிரா ஜன், அரசு தாய்-சேய் நல மய்ய இயக்குநர் விஜயா, அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்கு நர் எழிலரசி, சென்னை துறைமுகம் பொது மேலா ளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசியதாவது: இந்தியாவில் முதல் முறை யாக ரூ.1 கோடி செலவில் தாய் சேய் இணை சிகிச் சைப் பிரிவு, இந்த மருத் துவமனையில் தொடங் கப்பட்டுள்ளது. இம் மருத்துவமனை 178 ஆண் டுகள் பழைமையானது. தாய்-சேய் இணை சிகிச் சைப் பிரிவில் நலக் குறை வான, எடை குறைவான, குறைமாதமாய் பிறந்த குழந்தைகள் தங்கள் தாயு டன் 24 மணி நேரமும் இணைந்து இருப்பதற் கான வசதிகள் அமைக் கப்பட்டுள்ளன. ரூ.1 கோடி செலவில் கர்ப் பிணிகள் பரிசோதனைப் பிரிவு தொடங்கப்படவுள் ளன. நாள்தோறும் 300-க் கும் மேற்பட்ட கர்ப்பிணி கள் பரிசோதனைகளை செய்து வருகின்றனர். இப்பிரிவில் உள்ள வசதி களான மத்திய குழாய் மூலம் குளிரூட்டப்பட்ட பகுதி, கர்ப்பிணிகளுக்கு தேவையான அனைத்து ஆய்வக வசதிகள், ஸ்கேன் வசதிகள், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வசதி மற்றும் கர்ப்பிணி களுக்கு தேவையான அனைத்து மருந்துகளை வழங்கும் மருந்தகம் போன்ற வசதிகள் இதில் உள்ளன. இந்த மருத்து வமனையில் ரூ.25 லட்சம் செலவில், 120 பேர் அம ரும் வகையில் கலையரங் கம் அமைக்கப்படவுள் ளன என்றார் அவர்.


No comments:

Post a Comment