சென்னை பல்கலைக் கழகத்தின் மேனாள் பொரு ளாதாரப் பேராசிரியராக இருந்து, பிறகு நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல் கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் (ஓய்வு) என்ற தகுதியுடன் உலகத் தொடர் புடைய பிரபல பொருளாதார கல்வி அறிஞர் பேராசிரியர் டாக்டர் வேதகிரி சண்முக சுந்தரம் அவர்களும், கொடைக் கானல் அன்னை தெரசா பல் கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் டாக்டர் யசோதா சண்முகசுந்தரம் அவர்களும் - இருவரும் நேரில் வந்து நலம் விசாரித்து உரையாடி 5 விடுதலை ஆண்டு சந்தா வழங்கி, ‘விடுதலை' ஏட்டினையும், இயக்கப் பணி குன்றாமல் நடைபெற்று வருவதையும், ‘திராவிட மாடல்' ஆட் சியின் சீர்மிகு சாதனைகள் பற்றியும் சிறப்பித்துக் குறிப்பிட்டு, ஒவ்வொரு நாளும் தாம் விடுதலை படித்து மகிழ்வதாகவும் கூறி எம்மை ஊக்கப்படுத்தி விடைபெற்றனர். பேராசிரிய ருக்கு வயது 97, அதற்கு நெருங்கிய வயது அம்மையாருக்கும்!
(அம்மையாரின் தந்தையார் திராவிடர் இயக்கம் - நீதிக்கட்சியின் தொடக்கப் பொறுப்பாளர்களில் முக்கியமான ஒருவரான உயர்திரு. கோதண்ட ராமனார் அவர்கள்).
இத்தகு நிகழ்வுகள் ‘விடுதலை சந்தா இயக்கம்' நாளும் பேராதரவுடன் நடைபோடுவதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள் அல்லவா!
இப்படிப்பட்ட எழுச்சிப்படலமும், கடுமையான உழைப்பும், கடமையும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்வது உறுதி! உறுதி!
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும். (குறள் 1028)
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி. (குறள் 1022)
- கி.வீரமணி
சென்னை தலைவர்
5.8.2022 திராவிடர் கழகம்
No comments:
Post a Comment