திராவிட இயக்க கொள்கைப் பூக்களில் மிதந்த குத்தாலம் நகரப் பூங்கா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

திராவிட இயக்க கொள்கைப் பூக்களில் மிதந்த குத்தாலம் நகரப் பூங்கா!

குத்தாலம், ஆக. 23- குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் நூறு அகவை நெருங் கும் பெரியார் தொண்டர் ச.கோவிந்தசாமி அவர்களுக் குப் பாராட்டு விழா பொதுக் கூட்டம் 20.8.2022 சனிக்கிழமை மாலை குத்தாலம் நகர பூங்கா வில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஆ.ச. குணசேகரன் தலைமை வகிக்க ஒன்றிய தலைவர் சா.முருகை யன், நகர தலைவர் சா.ஜெகதீ சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலா ளர் கி.தளபதிராஜ் அனைவரை யும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாலை நான்கு மணியிலிருந்தே திரா விட இயக்க தோழர்கள் குடும் பம் குடும்பமாக நகர பூங்காவில் சங்கமமாகத் தொடங்கினர். நிகழ்ச்சி தொடங்கும் முன் னரே பூங்கா நிரம்பி வழிந்தது. மாலை 6.30 மணிக்கு கழக பேச்சாளர் இராம.அன்பழகன் தனது மூட நம்பிக்கை ஒழிப்பு உரையை தொடங்கி 1.30 மணி நேரம் அடை மழையாய் அசத் தினார். சரியாக எட்டு மணிக்கு தமிழர் தலைவர் அவர்களை கழக பொறுப்பாளர்கள் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகிலிருந்தும், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன், தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தா லம் பி.கல்யாணம் ஆகியோர் பூங்கா வாயிலிலிருந்தும் வர வேற்று அழைத்து வந்தனர். தமிழர் தலைவர் பூங்காவில் நுழைந்ததும் தோழர்கள் "தந்தை பெரியார் வாழ்க!" "அன்னை மணியம்மையார் வாழ்க!" "தமிழர் தலைவர் வீரமணி வாழ்க!" என எழுச்சி முழக்கமிட்டனர்.

பெரியார் தொண்டர் ச. கோவிந்தசாமி அவர்களுக்கும் அவரது இணையர் தையல் நாயகி அம்மாளுக்கும்  தமிழர் தலைவர் அவர்கள் அனைவ ரின் பலத்த கரவோசையோடு சால்வை அணிவித்து மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து எழுபதுக்கும் மேற்பட்ட திராவிட இயக்க முன்னோடிகளுக்கு  சால்வை அணிவித்து மாலை அணி வித்தார். பின்னர் தி.மு.க தேர் தல் பணிக்குழு செயலாளர் குத் தாலம் பி.கல்யாணம் தொடக்க உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் குடியரசு தலைவர், பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிய மூவருமே பார்ப்பனர்களாக இருந்த நிலையில் தமிழர் தலைவர் அவர்கள் இடஒதுக்கீடு தொடர் பான 31சி சட்டத்தை எப்படி தமிழ்நாட்டில் கொண்டுவர முயற்சி எடுத்தார்கள் என்பதை யும், அறிஞர் அண்ணா முதல மைச்சராக இருந்த நேரத்தில் சுயமரியாதை திருமணச்சட்டம் இயற்றப்பட்ட வரலாற்றையும் எடுத்துக் கூறினார். அவரைத் தொடர்ந்து  தி.மு.க.மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம். முருகன் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழர் தலைவர் உரை

இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி சிறப் புரையாற்றினார். அவர் தனது பாராட்டுரையில் பெரியார் தொண்டர் ச.கோவிந்தசாமி அவர்களின் சொந்த ஊரான கொக்கூர் கொள்கைக் கூடார மாக விளங்கிய வரலாற்றையும், ச.கோவிந்தசாமி அவர்களைப் பற்றியும் சிறப்பாக எடுத்து ரைத்தார். விடுதலை ஞாயிறு மலருக்கு இந்த வயதிலும் மிகுந்த நினைவாற்றலோடு அவர் செய்திகளை பகிர்ந்தி ருப்பதை சுட்டிக்காட்டி பாராட்டு தெரிவித்தார். 1957 சட்ட எரிப்பு போராட்டத் தின்போது கொக்கூரில் சட்ட எரிப்பு போராட்டத்தில் ஈடு பட்ட தோழர்களை காவல் துறை கைது செய்ய மறுத்ததால் மீண்டும் அவர்கள் குத்தாலம் சென்று சட்டத்தை எரித்து கைதான வீர வரலாற்றை எடுத் துக் கூறி தற்போது திருவாரூரில் பா.ஜ.க பிரமுகர் கல்லூரித் தேர்வில் தேர்ச்சி பெற ஆள் மாறாட்டம் செய்து காவல் துறையால் கைது செய்யப்பட்டி ருப்பதையும் சுட்டிக்காட்டி னார். விஞ்ஞான அடிப்படை யில் சிந்திப்பதுதான் பகுத்தறிவு. எங்கள் தோழர்கள் யாரும் திருக்கடையூர் சென்று சதா பிஷேகம் செய்துகொள்வ தில்லை. ஆனால் கடவுள் மறுப்பாளர்களான பலரும் இன்றைக்கும் நூறாண்டை கடந்து தோழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். (முழு உரை பின்னர்).

குத்தாலத்தில் அமைந் துள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா  ஆகியோர் சிலைகளுக்கு தி.மு.க.மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம். முருகன், தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல் யாணம் மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் புடைசூழ தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்.

தலைவர் வருகைக்கு முன்னர்    பெரியார் தொண்டர் ச.கோவிந்தசாமி அவர்களும் அவரது இணையர் தையல் நாயகி அம்மாளும் பிறந்தநாள் கேக் வெட்டினர். அவர்களுக்கு உள்ளுர் பிரமுகர்கள் உறவினர் கள் சால்வை அணிவித்தனர். விடுதலை ஞாயிறு மலரில் வெளிவந்த அவரது பேட்டி துண்டறிக்கையாக அனைவ ருக்கும் வழங்கப்பட்டது. குத் தாலம் ஒன்றிய செயலாளர் இளமாறன் நன்றி கூறினார்.

கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கழக சொற்பொழிவாளர் அதி ரடி அன்பழகன், மாவட்ட துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம், பெரியார் தொண்டர் அ.முத்தையன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி. காமராஜ், ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன், சீர்காழி ஒன்றிய செயலாளர் கடவாசல் செல்வம், கொள் ளிடம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரங்கன், மற்றும் திரா விடர் கழக, திராவிட முன் னேற்ற கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment