சென்னை, ஆக.24- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் தனித்துவமான (Distinct) மாநில கல்விக் கொள்கை வகுக்கும் நோக்கில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு, நீதியரசர் (ஓய்வு)
த.முருகேசன், தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு அமைத்து ஆணையிட்டுள்ளது. மாநிலக் கல்விக் கொள்கை சம்பந்தமாக பொதுமக்கள், கல்வி யாளர்கள், தன்னார் வலர்கள், தொண்டு நிறுவ னங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் ஆகியோரிடமிருந்து கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகள் stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம், அல்லது Centre for Excellence Building, 3ஆவது தளம், களஞ்சியம் கட்டடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025 என்ற அலுவலக முகவரிக்கு 15.09.2022ஆம் தேதி வரை அனுப்பி வைக்கலாம். மாநிலக் கல்விக் கொள்கைக்குழு மேலும் கூடுதலாக ஒரு மாத காலம் நீட்டித்து 15.10.2022 ஆம் தேதி வரை கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற முடிவு செய்து அவ்வாறே கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
மேலும் 20.09.2022 அன்று திருநெல்வேலி, தூத் துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மாநில கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும். இதேபோல், 21.09.2022 அன்று மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராம நாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும். இதேபோல் திருவாரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அக்டோபர் 3ஆவது வாரம் மாநில கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும்.
- இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment