பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டுமெனில் வரவு - செலவை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். சில நேரங்களில் செலவுகள் அதிகரிக் கும்போது சேமிக்க முடியாமல் போகும்.
இதைத் தவிர்பபதற்கு துல்லியமாக ‘நிதி நிர்வாக அட்டவணை’ மூலம் திட்டமிட்டால் ஓரளவாவது சேமிக்க முடியும் என்று நிதி ஆலாசகர்கள் தெரிவிக்கின்றனர்.
‘நிதி நிர்வாக அட்டவணை’ என்பது வரவு - செலவை மட்டும் குறிப்பிடுவ தல்ல. மொத்த ஊதியம், வருமானம் அல்லது நிதி பெறப்படும் நாட்கள் எவை? எந்தச் செலவுகளை எப்போது செய்வது?
அன்றாட நிதி நிலை, கடன்கள், அவசர நிதி, சேமிப்பு உள்ளிட்ட சகல நிதி சார்ந்த நடவடிக்கைகளையும், ஒவ் வொரு நாளும் சரிபார்க்கும் செயல் திட்டமாகும். அதனால் அன்றாடச் செலவுகளை மட்டுமல்லாமல், எதிர் காலத்தில் ஏற் படக்கூடிய செலவினங் களையும் அறிந்து தயார் நிலையில் இருக்கலாம். ‘நிதி நிர்வாக அட்டவணை’ இப்போது திறன்பேசி செயலிகளாக கிடைக்கிறது. அதை தற்போதைய மாதத்தின் 30 நாட்களுக்கும் மற்றும் அடுத்த மாதத்தின் 3 நாட்களுக்கும் கணக்கிட்டு அமைத்துக் கொள்ளலாம்.
ஊதியம் அல்லது வருமானம் கிடைக்கும் நாட்கள், வீட்டு வாடகை அல்லது வீட்டுக்கான கடன், மளிகை, மின்சாரக் கட்டணம், தொலைப்பேசி கட்டணம், சமையல் எரிவாயு, கிரெடிட் கார்டு, இண்டர்நெட் கட்டணம், குழந் தைகளின் கல்விக் கட்டணம், மருத் துவச் செலவு, ஆயுள் காப்பீடு, பெட் ரோல் மற்றும் வாகன பராமரிப்பு, இதர கடன்கள், பண்டிகைக்கால செலவுகள், பொழுது போக்கு மற்றும் மாதாந்திர சேமிப்பு ஆகிய செலவினங்களை ஒரு மாதம் தொடங்கும் முன்னரே நிதி அட்டவணை மூலம் பிரித்து கணக் கிட்டுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளுக்கான வரவு - செலவு குறித்த அறிவிப்பை சம்பந்தப் பட்ட நாளின் தொடக்கத்திலேயே ‘திறன்பேசி காலண்டர் செயலி’ தெரிவித்துவிடும். வரவு - செலவுகளை அறிந்து செயல்படுவதன் மூலம் தேவை யற்ற காலதாமத்தை தவிர்க்கலாம். அடுத்த வாரம் அல்லது 10 நாட்கள் கழித்து செய்ய வேண்டிய செலவினங் களையும் முன்னதாக அறிந்து, அதற்கு ஏற்ப செயல்படலாம்.
பணிபுரியும் திருமணமாகாத இளம் பெண்களைப் பொறுத்த வரையில், அவர்களது செலவுகள் பெரும்பாலும் திட்டமிடப்பட்டதாகவே இருக்கும். அவர்களது வருமானத்துக்கேற்ப, ‘நிதி நிர்வாக அட்டவணையைப்’ பயன் படுத்தினால் சேமிப்பை அதிகரிக்கலாம். செலவுகளை முன்னதாகவே, அலை பேசி காலண்டர் மூலம் அந்தந்த நாட் களில் பதிவு செய்து கொண்டு கடிகாரம் மூலம் அலாரம் ‘செட்’ செய்து கொள் ளலாம். அதன் வழியாக அத்தியாவசிய செலவுகளை அறியலாம், தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து விடலாம்.
No comments:
Post a Comment