ஒன்றிய அரசின் கொள்கைகளை மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது: மம்தா அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

ஒன்றிய அரசின் கொள்கைகளை மாநிலங்கள் மீது திணிக்கக்கூடாது: மம்தா அறிவுறுத்தல்

கொல்கத்தா, ஆக. 9- ஒன்றிய அரசின் கொள்கைகளை மாநிலங்கள் மீது திணிக் கக்கூடாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அறிவுறுத்தி உள்ளார்.

நிட்டி ஆயோக்கின் நிர்வாக கவுன்சில் கூட்டம்- பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் (7.8.2022) டில் லியில் நடந்தது. இதில் மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் 15 நிமிடம் உரையாற்றிய மம்தா, ஒன்றிய அரசு மாநிலங் களின் கோரிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். கூட்டத்தில் பேசும்போது அவர் கூறியதாவது:- 

ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே மிகப்பெரிய ஒத்துழைப்பு இருக்க வேண்டும். மாநிலங்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு இன்னும் தீவிரமாக எடுத்துக்கொண்டு நிறை வேற்ற வேண்டும். ஒன்றிய அரசின் கொள்கைகளை மாநிலங்கள் மீது திணிக் கக்கூடாது. அந்த வகை யில் புதிய கல்விக் கொள் கையை அமல்படுத்து மாறு மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. இவ்வாறு மம்தா கூறினார். ஒன்றிய அர சின் புதிய கல்விக் கொள் கையை அமல்படுத்த மறுத்து வரும் மம்தா, இந்த கொள் கையை ஆய்வு செய்யவும், மாநில அளவிலான கல் விக் கொள்கை உருவாக்கு வதற்கான தேவையை ஆராயவும் வல்லுனர் குழு ஒன்றை கடந்த ஏப் ரல் மாதம் அமைத்திருப் பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment