இனமானப் பேராசிரியர்
மானுடத்தை வாழ்வித்திடும் உயர்ந்த பயன்மிகுந்த பகுத்தறிவு பரப்பும் நோக்கத்துடன் தந்தை பெரியார் நடத்திவந்ததும், அவரது உள்ளத்து உணர்வின் உரை வடிவானதுமான ‘விடுதலை’ ஏடு, இன்று பெரியாரின் சீடரும், திராவிடர் கழகத் தலைவருமான எனது அருமை இளவல் மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்களின், அரிய சிந்தனைத் திறத்தாலும், அறிவுக் கூர்மையாலும், ஆழ்ந்த கொள்கைப் பிடிப்பாலும் இலட்சிய உறுதியாலும் தொடர்ந்து வீறுநடை போட்டு வருகிறது என்பது எனக்குப் பேருவகை தருகின்றது.
No comments:
Post a Comment