சிறீரங்கம் பெரியார் சிலை பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியவனுக்கு எதிர்வினையாக கவிச்சுடர் கவிதைப் பித்தன் எழுதிய கவிதை... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

சிறீரங்கம் பெரியார் சிலை பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியவனுக்கு எதிர்வினையாக கவிச்சுடர் கவிதைப் பித்தன் எழுதிய கவிதை...

“மண்டைச் சுரப்பை உலகுதொழும்“

மகத்தான தலைவர்!

மனிதகுல முன்னேற்றத்திற்கென்றே

“தொண்டு செய்து பழுத்தபழம்“

தந்தை பெரியார் அவர்களை நோக்கி, இன்று

கண்டகண்ட பயல்களும் கனல்(?) 

கக்கத் தொடங்கியுள்ளனர்.

இனப்பகைவர் வீசும் எலும்புத் 

துண்டுகளைத் தேடி, ஓடி

உண்டு கொழுத்த  தினவும், திமிரும்

இந்தப் பேடிகளை அப்படிப் பேச வைக்கின்றது!


வாழ்நாள் முழுவதும் வசைமழையை 

ஏற்றுக்கொண்டு, எவரின் ஏற்றத்திற்காகத்

தந்தை பெரியார் ஓய்வுறக்கம் இன்றி 

உழைத்துப் பாடுபட்டாரோ அவர்களில் சிலரே இன்று,

பெரியார் சிலையை உடைப்பேன், இடிப்பேன் என்றும்,

பெரியாரை இழிவுபடுத்துவதாகக் கருதிக்கொண்டு,

கழிவுகளையும், காவியையும் அவரின் சிலையில்

 ஊற்றியும்,  சேதப்படுத்தியும்,

கலவரத்தை உருவாக்கும் காலித்தனங்களின்

அற்ப மகிழ்ச்சியில் ஆடி வருகின்றனர்.

 

அடிமை இந்தியாவிலும், சுதந்திர இந்தியாவிலும்

உரிமைகள் அனைத்தும் இழந்து, பொட்டுப் பூச்சிகள்,

புன்மைத் தேரைகளைவிடக் கேவலமாக 

நடத்தப்பட்டவர்களின் சமூக விடுதலைக்காக

இறுதிமூச்சு அடங்கும்வரை உறுதியாக நின்று 

களமாடிய ஈடு இணையில்லாத போராளியான

தந்தை பெரியார் அவர்களின் குருதியும், 

வியர்வையும் கலந்த தியாகத்தால் 

விளைந்த அத்தனை நன்மைகளையும் 

உறிஞ்சி அனுபவித்துக்கொண்டு,

அவரையே கடுஞ்சொற்களால் “ அர்ச்சனை”

செய்தும், அடாத செயல்களில் ஈடுபட்டும் 

வருவோருக்குக் “காணிக்கை” இந்தக் கவிதை வரிகள்....

தந்தை பெரியார்! அவர் தலையின் மயிர்கள் 

கனலின் பொறிகள்! தாடி  மயிர்கள் வெடியின் திரிகள்!

அவர் மீசை மயிர்கள் வீரரின் வாள்கள்!

புருவ மயிர்கள் போர்க்கள வேல்கள்!


இமை மயிர்கள் தமிழரின் காவல்!

இங்கு.... எத்தனை “ மயிர்கள்” நித்தம் கிளம்பி...

சாணி அடித்தாலும் சகதி அடித்தாலும்

காவி அடித்தாலும் “கர்ணம்“  அடித்தாலும்

உடைப்பேன் இடிப்பேன் என்று

ஊளை யிட்டாலும் உரக்கக் குரைத்தாலும்...

கீர்த்திமிகு அந்தக் கிழச்சிங்கம்

ஊட்டிய மானமும் தீட்டிய அறிவும்

ஒருநாளும் ஒருபோதும்

ஒடுங்க முடியாது! நடுங்க முடியாது!

பெரியார் மயிரை... எவனும் பிடுங்க முடியாது!

- கவிச்சுடர் கவிதைப்பித்தன்


No comments:

Post a Comment