சென்னை, ஆக.5 தாழ்த்தப்பட்ட வகுப் பினருக்கான அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாத ஊழி யர்களுக்கு, அது குறித்து விளக்குமாறு இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகத்தினருக்கு தேசிய தாழ்த் தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கினர்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யத்தின் தலைவர் விஜய் சம்ப்லா, துணைத் தலைவர் அருண் ஹல்தார், உறுப்பினர் சுபாஷ் ராம்நாத் பார்தி, மருத்துவர் அஞ்சுபாலா மற்றும் ஆணை யத்தின் அதிகாரிகள் சென்னை வந்தனர்.
அவர்கள் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் அரச மைப்புச் சட்டத்தின்படி, தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊழியர் களுக்கான இட ஒதுக்கீட்டு கொள் கைகள், இதர பாதுகாப்பு அம்சங்களின் அமலாக்கம் குறித்து கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்றனர்.இதையடுத்து அவர்கள் செய்தியாளர் களிடம் கூறியது:
தாழ்த்தப்பட்டோர் நலச்சங்க பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களு டைய குறைகளைக் கேட்டறிந்தோம். பின்னர், அது குறித்து வங்கி மேலாண்மை அதிகாரிகளுடன் விவா திக்கப்பட்டது. இதையடுத்து தேசிய ஊரக சுகாதார இயக்கம், தேசிய நகர்ப் புற வாழ்வாதார இயக்கம், பிரதமர் வீட்டுவசதித் திட்டம் ஆகியவற்றில் பயனடையும் தாழ்த்தப்பட்டோர் வகுப்பினர் குறித்து கேட்டறிந்தோம். தாழ்த்தப்பட்டோர் வகுப்பினருக்கான அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாத ஊழியர்களுக்கு அது குறித்து விளக்குமாறு வங்கி நிர் வாகத்தினருக்கு உரிய அறிவுறுத்தல் களை வழங்கினோம். அதேவேளையில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக் கீட்டை நிரப்பும் வகையில், சிறப்பு ஊழியர் தேர்வு முறையை நடத்துமாறும் வங்கி நிர்வாகத்துக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும், நீண்ட காலமாக ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தாழ்த்தப்பட் டோர் வகுப்பைச் சார்ந்த ஊழியர்களை மாற்று இடங்களில் பணியமர்த்த வேண்டும்; ஊழியர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் அறிவு ரைகள் வழங்கப்பட்டன.
இறுதியாக ஊழியர்களின் குறை களை தீர்ப்பது குறித்த முறைகள் மற்றும் அதன் விவரங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறித்த கால இடைவெளியில் தாழ்த்தப்பட் டோர் வகுப்பைச் சார்ந்த ஊழியர் சங்கத்துடன் கூட்டங்கள் நடத்தி அவர் களுடைய குறைகளை பொறுமையுடன் கேட்குமாறு வங்கி உயர் அதிகாரி களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment