சுயமரியாதைச் சுடரொளிகள் எஸ்.எஸ். மணியம் - இராசலெட்சுமி ஆகியோரின் கொள்ளுப்பேத்தியும், கிருஷ்ணமூர்த்தி -அமிர்தகவுரி ஆகியோரின் பேத்தியும், அருண்காந்தி - சாந்தி ஆகியோரின் மகளுமான பொறியாளர் அருளி என்கிற அருள்மணி, இளங்கோவன் - விஜயசாமுண்டீஸ்வரி ஆகியோரின் மகன் பொறியாளர் ஜெயசுதன் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். உடன்: திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், மேனாள் அமைச்சர் மதிவாணன், திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், மோகனா வீரமணி மற்றும் முக்கிய பிரமுகர்கள், குடும்பத்தினர் உள்ளனர். (23.8.2022)
படம் 1: நாகை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.என். அமிர்தராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.10,000/-த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். படம் 2: பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் விடுதலை சந்தா தொகை ரூ.25,000/-த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (திருச்சி, 22.8.2022) படம் 3: மூத்த பொறியாளர் பேராசிரியர் எல்.ஜே. சுப்பிரமணியம் இல்லத்துக்கு தமிழர் தலைவர் நேரில் சென்று பயனாடை அணிவித்து உடல் நலம் விசாரித்தார். உடன்: மோகனா வீரமணி, பெரியார் பாலிடெக்னிக் முதல்வர் மல்லிகா, இளங்கோவன்.
No comments:
Post a Comment