சென்னை, ஆக. 25- கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரம் கிராமத் தில் உள்ள திரிபுராந்தகம், திரிபுர சுந்தரி மற்றும் நாரீஸ்வரர் கோவி லில் இருந்த நடராஜர், வீணாதாரி தட்சிணா மூர்த்தி, துறவி சுந்தரர்-பரவை நாச்சியாருடன் உள்ள சிலை, திரிபுராந்தகம் மற்றும் திரிபுரசுந்தரி உள்ளிட்ட 6 பஞ்சலோக சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்டன.
இந்த சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்புடையவை. இந்த சிலைகளை மீட்டு தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந் திரன் கடந்த 2018ஆம் ஆண்டு மனு அளித்தார். அதன்பேரில் தமிழ்நாடு காவல்துறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, அய்.ஜி. தினகரன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. முத்து ராஜா தலைமையிலான தனிப் படை காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டனர்.
திருடப்பட்ட சிலைகள் குறித்த ஆவணங்கள் இல்லாததால் உள் நாட்டு, வெளிநாட்டு கலைப் பொருட்கள் சேகரிப்பாளர்கள், பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல நிறுவனங்களில் இந்த சிலைகளின் படங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சேகரித்தனர். அதனை தடய அறிவியல் துறை மூலம் ஒப்பிட்டு சரிபார்த்தனர். இதில் வீர சோழ புரம் கிராமத்தில் உள்ள நாரீஸ்வர சிவன் கோவிலில் இருந்து திருடப் பட்ட 6 சிலைகளும் அமெரிக்கா வின் பல்வேறு அருங்காட்சியகங் களில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் புலன் விசாரணை மூலம் கண்டு பிடித்து உள்ளனர். இதையடுத்து 'யுனெஸ்கோ' ஒப்பந்தத்தின் கீழ் இந்த சிலைகளை தமிழ்நாடு கொண்டு வருவதற்கான நடவடிக் கைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மேற் கொண்டுள்ளனர். கும்பகோணம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் காணாமல்போன ‘கடவுளர்' சிலை களில் 2 சிலைகள் அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அண் மையில் கண்டுபிடித்துள்ளனர்.
No comments:
Post a Comment