பெரியார் மருந்தியல் கல்லூரியில் அலுவலகப் பணியாளராக பணியாற் றிய திருமதி கே. சின்னப்பொண்ணு 31.07.2022 அன்று இரவு ஒன்பது மணியளவில் இயற்கை எய்தினார். இவர் நமது நிர்வாகத்தின் மீதும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். நேர்மையுடனும், அர்ப்பணிப்புணர்வுடனும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்.
கடந்த 6 மாதங்களாக உடல்நலம் குன்றி வீட்டிலிருந்த படியே சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உடல் நலக் குறைவினால் நேற்று இரவு இயற்கை எய்தினார். அவரு டைய இழப்பு பெரியார் மருந்தியல் கல்லூரிக்கும் பணியா ளர்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது கணவர் மகேந்திரன் அவர்களுக்கும் மகன்கள் எம். ராஜா, எம். ஆனந்த், மருமகள்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பிலும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
- நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்
பெரியார் மருந்தியல் கல்லூரி திருச்சி 21.
No comments:
Post a Comment