சென்னை, ஆக. 9- சென்னை பல்லவன் சாலை சிவசக்தி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. 7.8.2022 அன்று இரவு 11 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாம்.
அப்போது அங்கு வந்த ஆறுமுகம் (வயது 27) என்பவர் வழக்கமாக இரவு 12 மணிக்கு தான் அன்னதானம் வழங்கப்படும். இந்த ஆண்டு ஏன் இவ்வளவு சீக்கிரம் வழங்குகிறீர்கள்? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக அஜித், ராஜ்குமார், பிரகாஷ் ஆகிய 3 பேர் குரல் கொடுத்தனர். அவர்களை குமார்(36) என் பவர் கண்டித்தார். அவருக்கு ஆதரவாக மாயவன், மாரி, செல்வம், முனியன், சதீஷ் ஆகிய 5 பேர் வந்தனர். இந்த நிலையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
இரு தரப்பினரும் கைகளாலும், கற்களாலும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் ஆறுமுகம், குமாருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அஜித் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 10 பேரை திருவல்லிக்கேணி காவல்துறை யினர் கைது செய்தனர்.
No comments:
Post a Comment