சென்னை,ஆக.4- தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர் களை சந்தித்தபோது ஆவின் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு குறித்து கூறினார். செய்தியாளர்களிடையே அவர் பேசும்போது,
தமிழ்நாட்டில் மொத்தம் ஆவின் நிறுவனத்திற்கு 28 பால் தயாரிக்கும் யூனிட்கள் உள்ளன. இந்த யூனிட்கள் அனைத்திலும் தண்ணீர் பிளாண்ட்கள் உள்ளன. இந்த பிளான்ட்களிலிருந்து குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது தண்ணீர் பாட்டில் மற்றும் லேபிள் போன்றவற்றை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
1 லிட்டர் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படவுள்ளதாக கூறிய அவர், இதுகுறித்து தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதேப்போல், அரசு விளம்பரங்கள் ஆவின் பாக்கட்டுகளில் இடம் பெற்று வரும் நிலையில், சினிமாப் படங்களின் விளம்பரங்களையும் வெளியிடுவது குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், இதுகுறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் இறுதி முடிவை அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.
ஆவில் பால் விற்பனை கடந்த ஆட்சியில் 26 லட்சம் லிட்டராக நிலையில், தற்போது 28 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இருந்த விழாக்காலங்களில் ஆவின் விற்பனையை அதிகரிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
No comments:
Post a Comment