இந்தியாவில் உள்ள முதியோர்களுக்கு நடத்தப் பட்ட பரிசோதனைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு ஏதாவது ஒரு கண் பிரச்சினை இருப்பது தெரிய வந் துள்ளது - பொதுவாக முதியவர்களுக்கு நீர்வறண்ட கண்கள் (dry eyes) வருவது வழக்கம்.
ஆனால் அது கண் பார்வையைக் கவலைக்குரிய வகையில் பாதிக்காதென்றும் கண் மருந்துத் துளிகள் (eye drops) பயன்படுத்துவது போதுமானது.
அல்லது சிறிய துண்டை வெந்நீரில் நனைத்து, கண்ணை மூடி, அப்பகுதியில் ஒத்தடம் கொடுப்பதும் இதற்கு உதவும்.
அவ்வப்போது ஒரு கண்ணை கையால் மறைத்து, மற்றொரு கண்ணால் பார்க்க முடிகின்றதா என்பதை சோதித்துப் பார்ப்பது நல்லது - இது எந்த கண் மங்கலாகத் தெரிகின்றது என்பதையும் அந்த நபருக்கு எடுத்துக்காட்டும். ஆரோக்கியமான கண்களுக்கு சமச்சீர் (balanced) உணவு முறையைக் கையாள்வது உகந்தது
கண் பார்வையைப் பாதிக்கக்கூடிய கண்புரை (cataracts) , கண் அழுத்த நோய் (glaucoma) , வயது தொடர்பான விழித்திரைச் சிதைவு (age-related macular degeneration), நீரிழிவு நோய் தொடர்பான விழித்திரை பிரச்சினை (diabetic retinopathy) ஆகியவற்றை முன்கூட்டியே அடையாளம் காணாத பட்சத்தில், பாதிக்கப்பட்ட கண் பார்வையைச் சீராக்கு வது மிகக் கடினமாகும்.
எடுத்துக்காட்டாக, கண் அழுத்த நோயாளிகள், நீரிழிவு நோய் தொடர்பான விழித்திரை பிரச்சினைகள் கொண்டவர்களின் பாதிக்கப்பட்ட பார்வையைச் சீராக்க இயலாது. ஆனால் தகுந்த சிகிச்சையின் வழி பிரச்சினை மேலும் மோசமாகாமல் கட்டுப்படுத்தலாம். ஆரம்பக் கட்டத்தில் உதவியை நாடினால் கண்புரை பிரச்சினைக்கு அறுவைசிகிச்சை மூலம் தீர்வு காண வும் முடியும்.
அப்படி தொடக்கத்திலேயே இந்த கண் பிரச்சி னைகளை அடையாளம் கண்டால், அதற்காக சிகிச்சை பெற்று பலன் அடைய அதிக வாய்ப்புகள் உண்டு
அண்மையில் வெளியிடப்பட்ட அரசாங்க சுகாதார ஆய்வொன்றில், கண் பிரச்சினைகள் கொண்டவர்களில் ஏறக்குறைய நான்கில் மூவருக்கு தமக்கு அந்த பிரச்சினைகள் இருப்பதே அறியாமல் இருந்ததாகவும் கண் செயல்பாட்டுப் பரிசோதனை களுக்குச் சென்ற பிறகே அதை பற்றி அறிய வந்த தாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நோயாளிகளில் கண்புரை பிரச்சினை அல்லது நீரிழிவு நோய் தொடர்பான விழித்திரை பிரச்சினை சற்று அதிகமாக இருப்பதாக ஆண்டிற்கு ஒரு முறையாவது, குறிப்பாக நீரிழிவு நோயாளிகள், சுகாதாரச் செயல்பாட்டுப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். ஒருவர் முதுமை அடைய அடைய கண், செவிப்புலன், பல் ஆரோக்கியம் தொடர்பான செயலாற்றல் தொய்வடையலாம், ஆகையால் முக்கியமாக கண் தொடர்பான பரிசோதனையை தவறாமல் செய்துகொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment