மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

மறைவு

தந்தை பெரியாரோடு பழகி, இன்றுவரை தந்தை பெரியார் கொள்கையில் வாழ்ந்துவரும் சிதம்பரம் மருத்துவர் க.சம்பந்தம் அவர்களின் துணைவியார் மருத்துவர் பிரேமலதா சம்பந்தம் அவர்கள் 5.8.2022 அன்று சென்னையில் மறைவுற்றார். 6.8.2022 அன்று சிதம்பரத்தில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. மருத்துவர் க.சம்பந்தம் அவர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தார்.

கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட இணைச் செயலர் யாழ்.திலீபன், சிதம்பரம் நகர அமைப்பாளர் இரா.செல்வரத்தினம், மாவட்ட ப.க. அமைப்பாளர் ஆசிரியர் செங்குட்டுவன், புவனகிரி ஒன் றிய தலைவர் இராமதாஸ் ஆகியோர் நேரில் சென்று மருத்து வர் க.சம்பந்தம் அவர்களை சந்தித்து இரங்கல் தெரிவித்தனர்.

- - - - -

கரூர் திரு.வி.க. சாலை உழவர் சந்தை எதிர்புறம் வசித்த பெரியார் பெருந்தொண்டர் வி.இராமசாமி ஆசிரியர் (வயது 85) 5.8.2022 அன்றி ரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவர் தொடர் விடுதலை வாசகர் ஆவார். கழகம் நடத்திய போராட்டங் களில் கலந்து கொண்டவர். அவரது மறைவு செய்தி அறிந்து கரூர் மாவட்ட திராவிடர் கழகத் தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment