எனது ஆசை நிறைவேறிற்று! அண்ணாவுக்குப் பெரியாரின் பாராட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

எனது ஆசை நிறைவேறிற்று! அண்ணாவுக்குப் பெரியாரின் பாராட்டு!

தோழர் அண்ணாதுரை  அவர்களால் எழுதப்பட்டு அவரே நடிப்பு ஆசிரியராய் இருந்து பழக்கப்பட்ட காஞ்சி திராவிடர் நடிகர் கழகத்தார் நடத்திய சந்திரோதயம் என்னும் நாடகத்தைப்பார்த்த மக்களுக்கு வெகு உணர்ச்சிமயமாகவும் அறிவுக்கு நல் விருந்தாகவும் மானத்திற்கு வழிகாட்டியாகவும் தொடக்கம் முதல் முடிவு வரை விளங்கியது என்றால் மிகைப்பட கூறியதாக ஆகாது.

மதவெறி சகலத்திலும் பரவி இடைவிடாத பிரச்சாரத்தினால் மக்களை அடிமை கொண்டு விட் டது. இவற்றை மாற்றவேண்டுமானால், அவற் றிற்கேற்ப எதிர்ப் பிரசாரம் தான் தக்க மருந்தா கும். அதற்கு இந்த மாதிரி நாடகம் முதன்மையானதாகும். நாம் கடந்த 10, 15 ஆண்டுகளா கவே சிந்தித்துச் சிந்தித்து ஒன்றும் சரியாய் கைகூடாமல் இப்போது தான் தோழர் அண்ண துரை அவர்கள் துணிவோடு கிளம்பியிருக்கிறார். இதைக்கண்டு நாம் பெருமை அடையாமலிருக்க முடியவில்லை,

சமயசஞ்சீவிகளுடன் சேர்ந்து அரசியல் சேற்றில் சிக்கி அல்லல்படாமல் இம்மாதிரி தொண்டுசெய்ய முன்வந்தது சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் உண்மையிலேயே பயனளிக்கக் கூடிய தாகும் என்று தெரிவித்துக்கொண்டு தோழர் அண்ணாதுரையையும் காஞ்சி திராவிட கழகத்தாரையும் மனமாரப் பாராட்டுகிறேன்.

10-11-1948 அன்று ஈரோட்டில் நடைபெற்ற சந்திரோதயம் நாடகத்திற்குத் தலைமை வகித்துப் பெரியார் அவர்கள் பேசியது.


No comments:

Post a Comment