சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் தண்டனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் தண்டனை

சென்னை, ஆக. 5- உணவு நிறுவனத்தில் சிறுவனை பணியமர்த்தியவருக்கு நீதிமன்றம் வாயிலாக, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

குழந்தைத் தொழிலா ளர் மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான குழந்தைத் தொழிலாளர் தடுப்புக் குழுவினருடன் கூட்டாய் வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், தொழிலாளர் ஆணையர் ஆகியோரின் அறிவுரைகளின்படி, இந் நடவடிக்கை எடுக்கப்படு கிறது.திருவான்மியூர் பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர் பணிபுரிந்த தாக வந்த தகவல் அடிப் படையில், வட்ட தொழி லாளர் உதவி ஆய்வர் மற் றும் தன்னார்வ குழுவினரு டன் புகார் தெரிவிக்கப் பட்ட உணவு நிறுவனத்தில் கூட்டாய்வு மேற்கொள் ளப்பட்டது.அப்போது, அங்கு பணிபுரிந்த சிறுவன் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக் கப்பட்டார். 

மேலும், வேலையளிப் பவர் மீது தொடரப்பட்ட வழக்கில், சைதாப் பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன் றத்தில், சிறுவனை பணிய மர்த்தியது குற்றம் என தீர்ப்பு அளித்து, 20 ஆயி ரம் ரூபாய் அபராதம் விதிக் கப்பட்டது. சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.நீதிமன்றம் வாயிலாக 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் அல்லது ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment