தருமபுரி மாவட்ட துணைச் செயலாளர் கு.சரவணனின் வாழ்விணையர் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 5, 2022

தருமபுரி மாவட்ட துணைச் செயலாளர் கு.சரவணனின் வாழ்விணையர் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

தருமபுரி, ஆக. 5- தருமபுரி மாவட்ட கழக துணைச் செயலாளரும், கே.எஸ்.கே டிம்பர் உரிமையா ளருமான கு. சரவணனின் இணையர்  இரா. செல்வி (வயது 35) (31.-7.-2022) ஞாயிற்றுக்கிழமை காலை 12 மணி அளவில் சேலம் தனியார் மருத்துவமனையில் மறைவுற்றார். அதன் பின் திங்கட்கிழமை (01.08.2022) மதியம் 1 மணிய ளவில்  அவரது சொந்த ஊரான காமலாபுரம் கிராமத்திற்கு அவ ரது உடல் எடுத்துச் செல்லப் பட்டு முன்னதாக கழக தலைமை நிலையத்தின் சார்பில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் தருமபுரி மாவட்ட தலைவர் வீ. சிவாஜி, செயலாளர் பீம. பிரபாகரன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் த.அறிவரசன், செயலாளர் 

கா. மாணிக்கம் ஆகியோர் முன் னிலையில், மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

சுயமரியாதைச் சுடரொளி செல்வி அவர்கள் உடலுக்கு கழக கொடி போர்த்தப்பட்டு எந்தவித மூடச்சடங்குகளும் இன்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காமலாபுரம் சுடு காட்டில் அடக்கம் செய்யப் பட்டது 

இந்த இறுதி நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள் அ.தீர்த்தகிரி, இரா.வேட்ராயன், இ.மாதன், க. கதிர், மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப் பாளர் இர. கிருஷ்ண மூர்த்தி மண்டல தலைவர் அ.தமிழ்ச் செல் வன்,  தருமபுரி நகரத் தலைவர் கரு. பாலன், மாவட்ட அமைப்பாளர் சி .காமராஜ் ,தொழிலாளர்  அணி தலைவர் பெ. கோவிந்தராஜ், மாவட்ட விவசாய அணி தலைவர் மு .சிசுபாலன்,  பாப்பாரப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் சுந்தரம், விடுதலை வாசகர் வட்ட செய லாளர் சுதா மணி,பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் கதிர் செந்தில் ,மேனாள் வாசகர் வட்ட செயலாளர் இரா.பரி ம ளம் ஒன்றிய தலைவர் பெ. செல் வம் காரிமங்கலம் ஒன்றிய தலைவர் இரா.இராஜா, செய லாளர் சி .இராமசாமி காமலா புரம் கிளைக் கழக தலைவர் சி சின்னசாமி செயலாளர்மாஸ்டர் மாணிக்கம், விவசாய அணி மாவட்ட செயலாளர் ப. முருகன்கிளை பொருளாளர் பெ. முத்து காமலாபுரம் தோழர்கள் பிரகாசம், பூ. மாணிக்கம், பெரி யண்ணன், முனியம்மாள், தேவிகா, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோ. திராவிட மணி, காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் பெ.செல்வம், செயலா ளர் பெ.செல்வேந்திரன், அமைப் பாளர் சி .ராஜா, மேனாள் ஒன்றிய தலைவர் சி. சீனிவாசன் பெ. மதிமணியன் மற்றும் ஏரா ளமான தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கழக தோழர்களும், ஊர் பொதுமக்களும் ஏராள மானோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர் 

குறிப்பு: (சரவணன்-செல்வி ஆகியோரது இணையேற்பு விழா 2005 ஆம் ஆண்டு காமலா புரம் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் தாலி இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திரு மணம் என்பது குறிப்பிடத்தக் கது)

No comments:

Post a Comment