தந்தை பெரியாரை அவமதிக்கும் வகையில் அவர் சிலையை இடிக்கவேண்டும் என்று கோரி காணொலி வெளியிட்ட தென்காசி மாவட்ட பாஜக பொறுப்பாளர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டார்.
தென்காசி மாவட்ட பாஜகவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப்பிரிவுதலைவர் கிருஷ்ணன் (வயது 33) தந்தைபெரியார் குறித்து அவதூறு பரப்பும்வகையில் பேசி வெளியிட்ட காட்சிப்பதிவு (வீடியோ) சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புளியங்குடி பகுதி திமுக பொறுப் பாளர்கள் புளியங்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் புளியங்குடி காவல்துறையினர் இ.த.ச. பிரிவுகள் 153(அ), 505(1)உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணனைக் கைது செய்தனர்.
No comments:
Post a Comment