சுயமரியாதைச் சுடரொளி எம்.எஸ்.நாராயணன் மகன் தலைமையாசிரியர் அறிவழகன் குடும்பத்தின் சார்பில் ஓராண்டு விடுதலை சந்தா ரூ. 2000 அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டது. (20.8.2022). திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்தூர் கிராமத்தைச் சார்ந்த வழக்குரைஞர் வீ.மணிமாறன் ஓராண்டு விடுதலை சந்தாவினை திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர் இரா.ஸ்டாலினிடம் வழங்கினார். திருப்பயத்தங்குடி ஊராட்சி திருமாளம்பொய்கை தி.மு.க கிளைச் செயலாளர் நா.முருகராஜ் ஓராண்டு சந்தா ரூ. 2000 வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் பாபு நாகர்கோவில் பெரியார் மய்யத்திற்கு வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு விடுதலை நாளிதழுக்கான சந்தாக்களை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment