அரியலூர் மாநாட்டின் தாக்கம் காணீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

அரியலூர் மாநாட்டின் தாக்கம் காணீர்!

கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள். அறிவித்தது போல் அரியலூர்  இளைஞரணி மாநில மாநாட்டு அணிவகுப்பு பேரணியில். நாகப்பட்டினம் மாவட்டம் முதல் பரிசு 25000/- (இருபத்து அய்ந்து ஆயிரம்) தொகையும், சான்றிதழும், வணக்கத்திற்குரிய நம் குடும்ப தலைவர் ஆசிரியர் அவர்கள் கையால் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா. வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாவட்ட தலைவர். விஎஸ்டிஏநெப்போலியன்.  மாவட்ட செயலாளர்  புபேஸ்குப்தா மற்றும்  தினம் தினம் தொடர்ந்து என்னிடத்தில் கைப்பேசி வாயிலாக என்னை ஊக்கப்படுத்திய கழக பொதுச் செயலாளர் இரா.செய(ல்) குமார். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் மாநில இளைஞரணி துணை செயலாளர். இரா.வெற்றிக் குமார் மாநில இளைஞரணி அமைப்பாளர். கோவை.பிரபாகரன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. மேலும். எங்களை இந்த அளவிற்கு அதாவது  தமிழ்நாடு முழுவதும் நம் கழக உறவுகள் எனக்கு தொடர்பு கொண்டு வாழ்த்துகளும். பாராட்டுகளும். கூறிய வண்ணம் - அடடா எவ்வளவு இன்பம். ஆனந்தம். மகிழ்ச்சி..

அவ்வளவும் - காரணம் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ்அவர்களும். 

நம் பாச தலைவர் ஆசிரியர் அவர்களும். தான்.... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா.களப்பணியின் போது 100 இளைஞர்கள் திரட்டும் பணியில் (சிறு-சில) கசப்புகள். சலசலப்பு இருந்தாலும் கூட.. கடுமையான கவனம், அடுத்தடுத்து ஏராளமான கூடுதல் அனுபவம். 

100  அல்ல இன்னும் 500 இளைஞர்கள் கூட திரட்டத் தயார் - தயார். நாகப்பட்டினம் மாவட்டம் தயார் - தயார்.  அய்யா.

 நன்றி நன்றி. 

மீண்டும் மீண்டும் நன்றி அய்யா 

களப் பணி தொடர்ந்துக் கொண்டே இருக்கும்...

இப்படிக்கு.

நாகை  நாத்திக பொன்முடி.


No comments:

Post a Comment