மகளிர் திட்டத்தில், வட்டார ஒருங் கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் அறிக்கை:மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், செங்கல்பட்டு மாவட்ட மகளிர் திட்டத்தில், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது.
அச்சிறுப்பாக்கம், திருக்கழுக்குன்றம், காட்டாங்கொளத்தூர் ஆகிய ஒன்றியங்களில், தலா ஒரு பணியிடம், மதுராந்தகம் ஒன்றியத் தில், இரண்டு பணியிடங்கள் என, அய்ந்து பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பத விக்கான கல்வி தகுதி, ஏதாவது ஒரு பாடத்தில், பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 28 வயதிற்குள் இருக்கவேண்டும். ஆறு மாதம் கணினி பயிற்சி, மகளிர் திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும். அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்தோராக இருப் பது அவசியம்.மேற்கண்ட பணியிடங்களுக்கு, வரும் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெற்று, செங்கல் பட்டு மாவட்ட மகளிர் திட்ட இணை இயக்குநர் மற் றும் திட்ட இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment