இவர்தான் கலைவாணர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

இவர்தான் கலைவாணர்!

சென்னையில் வி.பி.ஹாலில் 27.2.1944 இல் சந்திரோதயம் நாடகம் நடைபெற்றபோது தலைமை வகித்துப் பாராட்டிப் பேசினார் கிருஷ்ணன்.

''நான் எத்தனையோ நாடகங் களுக்குத் தலைமை வகித்து இருக்கிறேன். அவை பாசஞ்சர் வண்டி வேகத்தில்கூட மக்களின் முன்னேற்றத்திற்காகச் செல்வது கிடையாது. பிடித்துத் தள்ள வேண்டிய நிலை கூட ஏற்படும். ஆனால், தோழர் அண்ணாதுரை முதலியவர்கள் நடித்த சந்திரோதயம் நாடகம் மக்களின் எல்லாவித நலனுக்குமான மெயில் வேகத்தில் செல்கிறது.

நம் நாட்டிலே இவ்வித உணர்ச்சி மக்களிடையே ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது நமது பெரியார் அவர்களேயாகும்!

அவருக்குப் பக்க துணையாக நின்று தொண்டு புரிந்து வருபவர்களில் ஒருவராகிய நமது அண்ணாதுரை அவர்கள் பத்திரிகை உலகிலும், பேச்சு உலகிலும் அரசியல் உலகிலும் சிறப்புற்று விளங்குவது போன்று நாடக உலகிலும் மக்களை முன்னேற்றுவதற்கான வழியில் உழைத்து வருவதுபற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.

அவரைப் போன்ற ஆயிரக்கணக்கான அண்ணாதுரைகள் நாட்டில் தோன்றி, திராவிட நாட்டின் விடுதலைக்காக பெரியார் அவர்களின் கொள்கையைப் பின்பற்றி உழைக்க வேண்டுகிறேன்'' என்று தமது உரையில் கூறினார்.

குறிப்பு: இன்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்த நாள் (30.8.1957)


No comments:

Post a Comment