ராமநாதபுரம், ஆக.25- ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மழைவேண்டி சமைத்த உணவுப்பொருள்களுடன் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்றனராம். இப்படி மழைவேண்டி காளியம்மனுக்கு வழி பாடு செய்வதன்மூலம் மழை பொழிந்து விவ சாயம் செழிக்கும் என்னும் மூடநம்பிக்கை அம்மக்களிடம் உள்ளதாம்.
அதன்படி, உணவு சமைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்று, மழை வேண்டி கிராம மக்கள் பாரம்பரிய வழிபாடு நடத்தி னராம்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொசுக்குடிபட்டி கிராமத்தில்
300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நன்கு மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி, அந்த கிராம மக்கள் காளியம்மன்கோவிலுக்கு பாரம்பரிய உணவுகள் சமைத்து, பாத்திரங்களில் தலைச்சுமையாக ஊர்வல மாகக் கொண்டு சென்று வழிபாடு செய்கின் றனராம். இதையொட்டி ஓர் இடத்தில் சோறு, கேப்பை கூழ், மாவு வகை உணவை சமைத் தனர். பின்னர் அவற்றை பாத்திரங்களில் எடுத்து தலையில் சுமந்து முக்கிய வீதிகளில் ஆண்களும், பெண்களும் ஊர்வலமாக கோவிலுக்குக் கொண்டு சென்றுள்ளனர். கொண்டு சென்ற உணவை ஒன்றாகக் கலந்து, கஞ்சியாக்கி பனை ஓலையில் ஊற்றி வழிபட் டனராம்.
மழை பொழிய வேண்டுமானால் அறிவியல்பூர்வமாக மரம் வளர்க்க வேண்டும் என்று பலரும் பரப்புரை செய்து வரும் நிலையில், இப்படி வழிபாடு செய்தால் மழை பொழியுமா? பழக்கம், வழக்கம் என்பதன் பெயரால் மூடநம்பிக்கையைப் பரப்பிக் கொண்டிருக்கலாமா? சிந்திக்க வேண்டாமா?
No comments:
Post a Comment