மறியலில் ஈடுபட்டார் பிரதமர் மோடியின் சகோதரர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

மறியலில் ஈடுபட்டார் பிரதமர் மோடியின் சகோதரர்

 புதுடில்லி,ஆக.3- பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி, அகில இந்திய நியாய விலைக்கடை வர்த்தகர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருக்கிறார். அந்த கூட்டமைப்பு சார்பில் நேற்று (2.8.2022) டில்லி ஜந்தர்மந்தரில் மறியல் போராட்டம் நடந்தது. அதில், பிற நிர்வாகிகளுடன் பிரகலாத் மோடி கலந்து கொண்டார். பதாகைகளை பிடித்தபடி முழக்கங்களை எழுப்பினார். பின்னர், பிரகலாத் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் மனு அளிப்போம். வாழ்க்கை செலவுகள் அதிகரித்து விட்டதாலும், நியாயவிலைக்கடை நடத்துவதற்கான செலவுகள் அதிகரித்து விட்டதாலும் கமிஷனை கிலோவுக்கு 20 காசு மட்டும் உயர்த்துவது போதாது. ஒன்றிய அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். புதன்கிழமை நடைபெறும் செயற்குழு கூட்டத்துக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment