இன இழிவை ஒழிக்கும் இலட்சியத்தைக் கொண்ட நமது கழகக் கொடி பறக்காத ஊர் இருக்கக் கூடாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 3, 2022

இன இழிவை ஒழிக்கும் இலட்சியத்தைக் கொண்ட நமது கழகக் கொடி பறக்காத ஊர் இருக்கக் கூடாது

அரியலூர் மாநாட்டில் கழகக் கொடியை ஏற்றி முனைவர் தோழர் வே.இராஜவேல் கொள்கை முழக்கம்

அன்பார்ந்த தோழர்களே! இன்றைக்கு இந்த மாநில மாநாட்டில் நாம் உயர்த்தி இருக் கும் நமது கழகக் கொடி திராவிடர் கழகத்தின் லட்சியத்தையும், கொள்கையையும் பிரதி பலிக்க கூடியது. அது என்ன லட்சியம் என்று அன்னை மணியம்மையார் அவர்கள் கூறு கிறார். திராவிடர் கழகக் கொடியின் இலட் சியம் நம்முடைய சமுதாய சுயமரியாதை யையே குறியாய்க் கொண்டு நமது இழிவு களும், தடைகளும் நீக்கப் பெற்று மனிதத் தன்மை பெறுவதே முக்கிய நோக்கம் என்ப தையும், அதையே தாங்கள் முக்கியமாகக் கருதுவதோடு, அதற்காக தாங்கள் துக்கப்படு கிறோம் என்கிற துக்கக் குறியையும் காட்டுவ தற்காகக் கருப்பு வர்ணத்தையும் அதற்காகத் தீவிர கிளர்ச்சியில் இறங்கி விட்டோம், இனி ஓயமாட்டோம், எது வரினும் எதிர்த்து நிற் போம் என்பதைக் காட்டுவதற்காக நடுவில் சிவப்பு வர்ணத்தையும் வைத்துள்ளதை தமது திராவிடர் கழகக் கொடியில் பயன் படுத்துகிறோம். ஆகவே தோழர்களே தமிழ ரின் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவை ஒழிப் பதே நமது இலட்சியம். 

அரியலூர் முழுவதும் கழகக் கொடி

அரியலூர் நகர்முழுதும் பறந்துகொண்டி ருக்கும் நமது இலட்சியகொடி மிகஉயரிய தத்துவத்தைக் கொண்டுள்ளது. அத்தத்து வத்தை உருவாக்கியவர் நம் தத்துவ ஆசான் தந்தை பெரியார். 1944இல் திராவிடர் கழகம் உருவாகிவிட்டது. ஆனால் திராவிடர் கழகத் திற்கென்று தனிக் கொடி இல்லை, நீதிக்கட்சி பயன்படுத்திய கொடி தான் கழக கூட்டங் களில் ஏற்றப்பட்டது. 1945 - தந்தை பெரியார் கூறுகிறார், "நமக்கென்று ஒரு தனிக்கொடி வேண்டும், அந்தக் கொடி என்பது விஞ்ஞான அறிவோடும், நம் இலட்சியத்தைக் கிளப்பும், உணர்ச்சியூட்டும் முறையில் இருக்க வேண் டும். மேலும் நம் கொடி அறிவும், ஆத்திரமும், மானமும், கட்டுப்பாடும் ஏற்படும் முறையில் இருக்கவேண்டும். அதனை மக்கள் அன்பா கவும், உண்மையோடும் போற்றி இயக்கத்தின் பால் வர வேண்டும். கொடியினால் மக்க ளுக்கு உணர்ச்சி ஏற்பட வேண்டும். ஏன் விஞ்ஞான அறிவோடு கூடிய கொடி வேண்டும் என்றால், நம்முடிய திராவிடர் கழகம் மக்களிடையே உள்ள மூடநம்பிக்கை, பழமைவாதம் போன்றவற்றைப் போக்க, அறிவியல் மனப்பான்மையை வளர்க்க பிரச் சாரம் செய்துவரக்கூடிய இயக்கம். மேலும் திராவிடர் கழகம் என்பது சீர்திருத்தத்திற்கான இயக்கம். போராட்டத்தின் காரணமாகத்தான் நமது இயக்கமே உருவானது. திராவிடர் கழகத்தைப் பொறுத்த அளவில் இரண்டு அணுகுமுறைகள்தான். ஒன்று விழிப்புணர்வு பிரச்சாரம், அடுத்தது ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம். எனவே தான் இளைஞர்களே தந்தை பெரியார் அவர்கள் நம் இலட்சியத் தைக் கிளப்பும், உணர்ச்சியூட்டும் முறையில் கொடி இருக்க வேண்டும்" என்றார்.

நமது கொடியின் வண்ணங்கள் குறிப்பது என்ன?

நமது கொடியில் இருகிற கருப்பு நிறம் எதிர்ப்பின் அடையாளம். நாம் எதை எதிர்க்கிறோம், ஆரியத்தை, ஆதிக்கத்தை எதிர்க்கிறோம், சனாதனிகளை எதிர்க்கிறோம், வடவர் ஆதிக்கத்தை எதிர்க்கிறோம், பெண் ணடிமைத்தனத்தை எதிர்க்கிறோம், ஜாதி ஏற்றத்தாழ்வை எதிர்க்கிறோம் இத்தனை எதிர்ப்புகளையும் புரட்சிகர எண்ணத்துடன் செய்கிறோம் என்பதை குறிக்க தான் நடுவில் சிவப்பு. அருமைத் தோழர்களே இப்படி மிக உயர்ந்த தத்துவத்தை உள்ளடக்கிய கொடி யைத்தான் இங்கே நாம் இன்றைக்கு ஏற்றியிருக்கிறோம். 

நீண்ட நெடுங்காலமாக இந்த மண்ணில் நிலவி வந்த அறியாமையை, மூடபழக்கவழக் கங்களை, இழிவை, ஜாதி மதப் பேதங்களை ஒழிக்கும் தந்தை பெரியாரின் சிந்தனைகளை தாங்கிநிற்கும் பேராயுதம் தான் நமது கழக கொடி!

இன்றைக்கு இங்கே நாம் உயர்த்தியிருக் கும் நமது அடையாளமாகிய கருப்பு சதுரத் தின் நடுவே சிவப்பு வட்டம் பொருந்திய கொடி என்பது மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்கிற பண்பாட்டை கற்றுக் கொடுத்த கொடி!

ஒருகாலத்திலே இந்த மண்ணில் தோளிலே துண்டு போடக்கூடாது, காலிலே செருப்பு அணியக்கூடாது, தெருக்களில் நடக்கக்கூடாது என்றபோது ஆமைகளாக அடங்கிய இருந்தவர்களின் வாரிசுகள் இன் றைக்கு சிங்கங்களாக நவநாகரீக உடைய ணிந்து வலம் வருகிறார்கள் என்றால், அதற் குக் காரணம் இந்தக் கொடி செய்த புரட்சி. கடவுள் இல்லை என்று கூறும் கொடி என்று பலர் கூறுகிறார்கள், ஆனால் நம்முடைய இந்தக் கொடி கடவுள் உண்டு என நம்புகிற அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்ற உரிமைக் குரல் எழுப்பிய கொடி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்று சொன்ன வள்ளுவர் பிறந்த மண்ணிலே பிறப்பின் அடிப்படையில் ஜாதி இருக்கலாமா? என்று கேள்வி கேட்டு ஜாதியை ஒழிக்கும் சமத்துவக் கொடி.

கழகக் கொடி இல்லாத ஊர் இருக்கக் கூடாது

ஆகவே அரியலூரில் அணிதிரண்டிருக் கும் அருமை இளைஞர்களே!  நமது கழகக் கொடி, தமிழர்களுக்கான விடுதலைக் கொடி, அடிமை விலங்கை உடைத்தெறிந்த சுயமரி யாதைக்கொடி, எந்தவித உயர்வு தாழ்வும் இருக்கக்கூடாது எனும் சமதர்மக்கொடி, ஆரியர்-திராவிடர் போராட்டத்தில் நாம் உயர்த்தும் போர்க்கொடி, ஜாதி மத பேதமற்ற சமத்துவ சமுதாயம் படைக்க பட்டொளிவீசி பறக்கும் நமது இலட்சியக் கொடி. நமது ஆசிரியர் அவர்கள் தம் 10 வயதில் ஏந்திப் பிடித்து தற்போது 90 வயதை தொடவிருக்கும் நிலையிலும் உயர்த்திபிடிக்கும் உன்னதக் கொடி. மிக எழுச்சியோடு நடைபெறக்கூடிய இம்மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் இளைஞர்களே! தோழர்களே! இனி இந்த மண்ணிலே நமது கழகக் கொடி இல்லாத ஊர் இல்லை என்று நிலை வரவேண்டும். அந்த உணர்ச்சியோடு இனி நமது பணி அமைய வேண்டும் என கூறி முடிக்கிறேன் நன்றி வணக்கம்.


No comments:

Post a Comment