சென்னை,ஆக. 7- சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் குடும்ப அட்டை மற்றும் வருமா னச் சான்றிதழ் இல்லா மல், 520 பேருக்கு முதல மைச்சரின் விரிவான மருத் துவக் காப்பீட்டு திட்ட அட்டையை மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தொடர்ந்து `ஒப்பியாய்டு' மாற்று சிகிச்சை மய்யத்தையும் திறந்து வைத்தார்.
சுகாதாரத் துறைச் செயலாளர் ப.செந்தில் குமார், தமிழ்நாடு சுகா தார அமைப்பு திட்ட இயக்குநர் உமா, தமிழ் நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் திட்ட இயக்குநர் ஹரி ஹரன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனை டீன் தேரணிரா ஜன், அரசு மனநல காப் பகத்தின் இயக்குநர் பூர் ணசந்திரிகா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்ற னர். அப்போது, அமைச் சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழ்ப்பாக் கம் அரசு மனநல காப்ப கம், 1794-ஆம் ஆண்டு மன நோயாளிகளுக்கான புகலிடமாகத் தொடங் கப்பட்டு, பின்னர் 1922ஆம் ஆண்டு அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1947-ஆம் ஆண்டு புற நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது. 1978ஆ-ம் ஆண்டு ‘அரசு மனநல மருத்துவமனை’ என்பது ‘அரசு மனநல காப்பகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது 1800 படுக்கை வசதிகளுடன் இந்தியாவின் 2-ஆவது மிகப்பெரிய மனநல காப் பகமாக 24 மணி நேரமும் செயல்படுகிறது. தினமும் 350 புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெறு கின்றனர். அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றிதழ் இன்றி காப்பீட்டுத் திட் டத்தின் கீழ் சிகிச்சை பெற 520 பேர் பயனாளி களாக சேர்க்கப்பட்டனர். ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மருத்துவ திட் டம், தேசிய எய்ட்ஸ் கட் டுப்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படும் தமிழ் நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்துடன் இணைந்து தமிழ்நாட்டி லேயே முதல் முறையாக அரசு மன நல காப்பகத் தில் செயல்பட உள்ளது. ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை என்பது, போதை ஊசியால் உண்டாகும் பாதிப்புகளை குறைத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வழிமுறை யாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசு மனநல காப்ப கத்தின் இயக்குநர் பூர்ண சந்திரிகா கூறும்போது, “ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மருத்துவம் என் பது மாத்திரை சிகிச்சை முறையாகும். போதை ஊசி போட்டுக் கொள்ப வர்கள், அதிலிருந்து விடு பட இந்த மாத்திரையை தினமும் உட்கொள்ள வேண்டும். 2 ஆண்டுகள் மாத்திரையை உட் கொண்டால், போதை ஊசி பழக்கத்தில் இருந்து விடுபடலாம். அதேநேரத் தில் ஒரே போதை ஊசியை 4 அல்லது 5 பேர் போட் டுக் கொள்வதால் எச்ஐவி போன்ற நோய்கள் வருவ தற்கு வாய்ப்புள்ளது. மாத்திரையை உட் கொள்வதால் இது போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதும் தடுக்கப்படுகிறது. அரசு மனநல காப்பகத்துக்கு வந்து மாத்திரையை பெற் றுக் கொள்ளலாம்” என் றார். கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம், 1794-ம் ஆண்டு மன நோயாளி களுக்கான புகலிடமாகத் தொடங்கப்பட்டு, பின்னர் 1922-ம் ஆண்டு அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1947-ம் ஆண்டு புற நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது.
No comments:
Post a Comment