கருநாடகத்திலும் ஹிந்தி எதிர்ப்புக் குரல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

கருநாடகத்திலும் ஹிந்தி எதிர்ப்புக் குரல்!

கருநாடகத்தில் ஹிந்தி மொழித் திணிப்பு வேகமாக நடந்துகொண்டு வருகிறது,  இதனை தாமதமாக தெரிந்து கொண்ட கன்னட மொழி ஆர்வலர்கள் தற்போது ஹிந்தித் திணிப்பை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

சமீபத்தில் ஆட்டோக்களின் பின்பக்கத்தில் ஒன்றிய அரசின் விவசாயிகள் காப்பீட்டுத் திட்ட ஹிந்தி விளம்பரம் இருந்தது. இதனை எதிர்க்கும் விதமாக ஹிந்தி விளம்பரம் உள்ள ஆட்டோக்களை புறக்கணி யுங்கள் என்று கன்னட மக்களை  கன்னட அமைப்பு கள் வலியுறுத்திய நிலையில், ஒரே நாளில் அனைத்து விளம்பரங்களும் அப்புறப்படுத்தப்பட்டன. ஆனால் அரசு  மீண்டும் விளம்பரத்தை கன்னட மொழிக்கு மாற்றி ஒட்டவில்லை.  ஒன்றிய அரசு மற்றும் பாஜக கருநாடக அரசு இரண்டுமே ஹிந்தித் திணிப்பை கடுமையாக்கி, எதிர்ப்பு வரும் போது எல்லாம் பின்வாங்கி - மீண்டும் ஹிந்தி மொழியைத் திணித்து வருகின்றன. 

இந்த நிலையில் ‘கிராந்தி' (புரட்சி) என்ற கன்னட திரைப்படம் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் நடிக்கிறார்.  இந்த திரைப்படத்தின் சுவரொட்டி தற்போது வெளியாகி உள்ளது. அதில் கன்னட எழுத்தில் நாயகனை வரைந்துள்ளனர். 

 சமீபத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ஒருவர் தென்மாநில நடிகர்கள் எல்லாம் ஹிந்தி மொழியில் நடிக்கவேண்டும், அப்படி நடிக்காமல் இருப்பது அவர்களின் தேசபக்தியை கேள்விக்குறியாக்கும் என்று கூறியிருந்தார். 

 இதற்கு குறிப்பாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரை உலகம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. அந்த நடிகர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி இருந்தது, தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர் மகேஷ் பாபு இனி நான் ஹிந்திப்படங்களில் நடிக்கமாட்டேன்; என்னிடம் கால்ஷீட் கேட்டு ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் வரவேண்டாம் என்று கூறி ஏற்கெனவே சில ஹிந்தி மொழிமாற்றத் திரைப்படங்களுக்கு வாங்கிய முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்து, தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.  இந்த நிலையில் கன்னட மொழியில் வெளிவரப் போகும் ‘புரட்சி' என்ற திரைப்படத்தில் நாயகனை கன்னட எழுத்துகளால்  வரைந்திருப்பது மக்களி டையே கன்னட மொழி உணர்வை துளிரவைக்கும் புரட்சியாக கருதப்படுகிறது

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச் சாரம் என்று குரல் கொடுக்கும் இந்துத்துவவாதிகளுக்கு, காவிக் கூட்டத்துக்கு ‘மரண அடி' ஒவ்வொரு பகுதியிலிருந்தும் விழுந்து கொண்டுள்ளது.

தென்னிந்தியாவில் கருநாடகா மாநிலத்தில் மட் டுமே பிஜேபி தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டுள்ளது. அது கூட மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஆட்சியல்ல. தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும், பிஜேபி - சங்பரிவார்க் கும்பலுக்கே உரித்தான தில்லு முல்லு அரசியல் அணுகுமுறையில், எதிர் வரிசையில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் களை விலைக்கு வாங்கும் கேவலத்தை என்னவென்று சொல்லுவது!

வாலி, சுக்கிரீவன் சகோதரர்களுக்கிடையே இருந்த சண்டையின் இடையில் புகுந்து மரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்து வாலியைக் கொன்றவன்தான் ராமன். அந்த ராமராஜ்ஜியத்தை அமைக்கப் போகி றேன் என்று சொல்பவர்கள், வேறு எப்படித்தான் நடந்து கொள்வார்கள்?

ஹிந்தியைத் தீவிரமாக திணிக்கட்டும் - அதன் விளைவை கருநாடகத்தில் நடக்கும் தேர்தல்களில் பி.ஜே.பி. அனுபவிக்கும். 

இது கல்லின் மேல் எழுத்தாகும்.

No comments:

Post a Comment