எத்தனைக் காலம் நட்டத்தைத் தாங்குவது? ‘விடுதலை’ நாளேடாக வருவதை நிறுத்திவிட்டு வார ஏடாக வெளியிட்டால் என்ன என்று ஒரு கட்டத்தில் பெரியார் சிந்தித்தார். அதனை அன்னை மணியம்மையாரே தெரிவித்திருக்கிறார் சரியான மாலுமியை அடையாளம் காட்டினார் அய்யா. ஆனால், அய்யா அவர்கள் அச்சப்பட்ட அந்தச் சோதனைக் காலத்தையெல்லாம் ‘விடுதலை’ வென்றுவிட்டது. மக்கள் கடலில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. ‘விடுதலை' மட்டுமல்ல. அய்யா அன்றைக்கு வகுத்த கனவுத் திட்டங்களெல்லாம் இன்றைக்கு அறிவாலயங்களாக உயர்ந்து நிற்கின்றன. காரணம் கப்பலுக்குச் சரியான மாலுமியை அன்றைக்கே அய்யா அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறார்.
ஆசிரியர் வீரமணி ஆரம்பத்தில் அய்யாவின் மாணவர். அடுத்து அய்யாவின் படைத்தளபதி பின்னர் அய்யாவின் நண்பர். அய்யாவின் இறுதிக் காலத்தில் அவருக்குத் தோழர், இன்றைக்கு அவரை தமிழர்தம் தலைவராகச் சமுதாயம் அங்கீகரித்திருக்கிறது. இத்தகைய சிறப்பு வேறு எவருக்குக் கிடைக்கும்? ‘விடுதலை’ என்றால் ‘சோர்வறியாத வீரர் வீரமணி' என்று அர்த்தம். வீரமணி என்றால் நடைதளராத ‘விடுதலை' என்று அர்த்தம். அவருடைய விடாமுயற்சி தந்த வெகுமதிதான் விடுதலையின் வெற்றியாகும்.
No comments:
Post a Comment