சென்னை, ஆக. 23- தமிழ் மொழி தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பிற மாநி லத்தவர்கள் தமிழ்நாட் டில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை கட்டுப்படுத் தும் விதத்தில் இந்த நடை முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. அதன் படி 24 மூத்த விரிவுரை யாளர், 82 விரிவுரையா ளர், 49 இளநிலை விரிவு ரையாளர் என மொத்தம் 155 காலி பணியிடங்கள் இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த தேர்வில் தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டா யம் என்னும் முறை அறி முகப்படுத்தப்பட்டுள் ளது. அதன்படி, 50 மதிப் பெண்களுக்கு 30 கேள்வி கள் கேட்கப்படும். தேர்வு நேரம் 30 நிமிடங்கள் ஆகும். இதில், குறைந்த பட்சம் 40% (20 மதிப் பெண்கள்) எடுத்து தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற் றால் மட்டுமே பிரதான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.பகுதி ‘ஆ‘ பிரிவில், 150 மதிப் பெண்ணில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக எஸ்.சி. பிரிவினருக்கு 68 மதிப்பெண்ணும், எஸ்.டி. பிரிவினர் 60 மதிப்பெண் ணும், மற்ற பிரிவினருக்கு 75 மதிப்பெண்ணும் நிர் ணயிக்கப்பட்டு இருக்கி றது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி விரைவில் அறிவிக் கப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment