செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

செய்தியும், சிந்தனையும்....!

சக்தியல்ல - பொம்மையே!

* கோவில் பூசாரி வெட்டிக் கொலை.

>> கோவில் சாமி என்ன செய்ததாம்?

பாலுக்குத் தோழன் பூனையா?

* தமிழ்நாட்டில் ஹிந்து அமைப்புப் பிரமுகர் களுக்குப் போலீஸ் பாதுகாப்பு. 

>> உண்மையைச் சொல்லப் போனால் இந்த ஹிந்து அமைப்புப் பேர்வழிகளிடமிருந்துதான் மக்களுக்குப் பாதுகாப்புத் தேவை!

 ஆஸ்த்மா உண்டு; ஆன்மா கிடையாது

* தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும்.

- உள்துறை அமைச்சர் அமித்ஷா

>> ஓ, அந்த ஆன்மா சமஸ்கிருதமா - குலக்கல்வியா?

 கோவில்களின் மூலாதாரம்?

* எம்.ஜி.ஆர். ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம்.

>> கோவில்கள் தோன்றிய இரகசியம் இப்பொழுது புரிகிறதா?

No comments:

Post a Comment