ஜாதிப் பாகுபாடு குறுக்கிடக் கூடாது: சட்டமே உங்களை வழி நடத்தட்டும் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

ஜாதிப் பாகுபாடு குறுக்கிடக் கூடாது: சட்டமே உங்களை வழி நடத்தட்டும் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

சென்னை, ஆக.30- சட்டம் மட் டுமே உங்களை வழிநடத்த வேண்டும். ஜாதி, மதம் போன்ற பாகுபாடுகள் உங்கள் பணியில் குறுக்கிடக் கூடாது’’ என்று பயிற்சி முடித்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி யுள்ளார். 

தாம்பரம் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற் சியகத்தில் உதவி ஆய் வாளர் களின் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில், 260 பெண் உதவி ஆய்வாளர்கள் உட்பட 927பேர் பயிற்சி முடித்து, அணிவகுப்பில் பங்கேற்றனர்.

பயிற்சி முடித்த உதவி ஆய் வாளர்கள் மத்தியில், முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பொறுப்புமிக்க மனிதர்களாக நீங்கள் மாறும் பெருமைமிகு நாள் இது. காவல் துறையில் நேரடி உதவி ஆய்வாளர்களாக அடியெடுத்து வைக்கும் 927 பேருக்கு கடந்த ஆண்டு செப் டம்பர் 1ஆ-ம் தேதி நான் பயிற்சியை தொடங்கி வைத் தேன். பயிற்சியை முடித்த களைப்பைவிட பணியைத் தொடங்க இருக்கும் மகிழ்ச்சி உங்கள் முகங்களில் தெரிகிறது.

முதன் முறையாக, ஒரே நேரத்தில் 927 உதவி ஆய்வாளர் கள் பயிற்சியை முடித்துள்ளீர் கள். இதில் 632 பேர் தாலுக்கா அளவிலும், 264 பேர் ஆயுதப் படையிலும், 31 பேர் தமிழ்நாடு சிறப்புக் காவல் பிரிவிலும் பயிற்சியை நிறைவு செய்துள் ளீர்கள். 260 பெண் ஆய்வா ளர்கள் இப்பயிற்சியில் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் புதிய பணித்தேர்வுகள் அனைத் திலும், பெண்களுக்காக மூன் றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நோக்கம் நிறைவேறி வருகிறது.

இங்கு, பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங் கள் முதல், கணினிசார் குற்றங் கள் வரையிலான பல்வேறு குற்ற நிகழ்வுகளைப் புலன் விசா ரணை செய்ய அதிகாரிகளுக்குத் திறன்பயிற்சி அளிக்கப்பட்டுள் ளது. சட்டம் ஒழுங்கைக் காப் பாற்றுவது உங்கள் முக்கியக் கடமை. குற்றம் நடக்காமல் தடுப்பதும் உங்களது கடமை யாக இருக்க வேண்டும். எந்தக் குற்றவாளியும் தப்பிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத் தில், அப்பாவி யாரும் தண்டிக் கப்பட்டு விடக் கூடாது.சட்டம் தான் உங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு. சட்டம் மட்டுமே உங்களை வழிநடத்த வேண் டும். சாதி, மதம் போன்ற பாகு பாடுகள் உங்கள் பணியில் குறுக் கிடக் கூடாது. ஏழை, பணக் காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் வேண்டாம். பாதிக்கப்பட்டவர், குற்றம் செய்தவர் என்பதே உங்கள் அளவுகோலாக இருக்க வேண்டும். யாரையும் ஒரு பக்கச் சார்புடன் அணுகி, பிரச்சினையைப் பார்க்காதீர் கள். உங்களுடைய அனைத்து நடவடிக்கைகளும் நியாயமா னதாக, பாரபட்சமற்றதாக, உறுதியானதாக, பண்புள்ள தாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களது பணிக் காலத்தில், சீருடையின் மதிப்புக்கும், புக ழுக்கும் களங்கம் ஏற்படாத வாறு பணியாற்ற வேண்டும்.

இப்போது உள்ள உடற் தகுதியையும், உற்சாகத்தையும், நீங்கள் தொடர்ந்து தக்கவைத் துக் கொள்ள, உங்களுக்குள் ளேயே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நேர்மை, சுயமரி யாதை ஆகிய 5 தூண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும். நாடும், நாட்டு மக்களும் உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்டுள்ள னர். மக்களைப் பாதுகாத்து மாநிலத்தின் மாண்பைக் காப் பாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், தமிழக டிஜிபி செ.சைலேந்திரபாபு பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் 

கொண்டார். மேலும், தாம்பரம் காவல் ஆணையரும், காவல் உயர் பயிற்சி மையத்தின் இயக் குநருமான அமல்ராஜ் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment