உரத்தநாடு பெரியார் படிப்பகத்திற்கு மன்னார்குடி செங்கமலத்தாயார்கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி நிறுவனத் தாளாளர் ஆசிரியர் முனைவர் வி.திவாகரன் வருகைதந்தார்.பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாத்துரை, ஒன்றிய கழக தலைவர் த.செகநாதன், லிட்டில் ரோஸ் பள்ளி தாளாளர் வீ.அகிலன் ஆகியோர் பயனாடை போர்த்தி வரவேற்றனர்.
தமிழர் தலைவர் ஆற்றிவரும் அரும் பணிகளால் தமிழ்நாடு மதவெறியர்களின் கூடாரமாக ஆகாமல் பாதுகாக்கப்படுகின்றது என்றும் ஆசிரியர் அவர்கள் நல்லஉடல்நலத்தோடு இன் னும் அய்ம்பதாண்டுகள் வாழவேண்டும் என்பதே எனது விருப்பமாகும்எனதெரிவித்தார். எந்த லாபமும் கருதாது பாடுபடும் திராவிடர்கழக தொண்டர்கள்மீது மிகுந்தமரியாதையுண்டு என்ற தோடு, தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அளிக்கப் படும் விடுதலை சந்தாவிற்கு தமது பங்காக அய்ந்தாண்டு விடுதலை சந்தாக்களுக்குரிய தொகைரூ.10.000 வழங்கினார்.
பெரியார் வீரவிளையாட்டுக்கழக மாநில செயலாளர் நா.இராமகிருட்டிணன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சைமாநகர அமைப்பாளர் செ.தமிழ்ச்செல்வம், அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா.திராவிடச்செல்வம், விடுதலை சந்தாவசூல்குழுத்தலைவர் பொறியாளர் வ.பால கிருட்டிணன், வசூல்குழுபொருளாளர் கு.நேரு, பொறியாளர் நெடுவை ந.நேரு, ஒன்றிய தி.க அமைப்பாளர் பு.செந்தில்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் நா.பிரபு ,மாவட்ட பகுத்தறிவு ஆசிரி யரணி அமைப்பாளர் கு.குட்டிமணி, நகர செயலா ளர் ரெ.ரஞ்சித் குமார் ,தெற்கு பகுதி செயலாளர் க.சுடர்வேந்தன், மேற்கு பகுதி செயலார் இரா.மோகன்தாஸ் ,பெரியார் நகர் இரா.மகேஸ் வரன், ஒக்கநாடு மேலையூர் ச.பெரியார்மணி உள் ளிட்டதோழர்கள் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment