“திரு. கி. வீரமணியிடம் சிகரெட் உட்பட எந்த வேண்டாத பழக்கமும் கிடையாது. எப்போதாவது பார்க்கும் ஆங்கில அறிவியல் படங்களைத் தவிர, சினிமா பார்ப்பதும் கிடையாது. ஈ.வெ.ரா. பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு அதிகாரப்பூர்வமாய்ச் சேலம் மாவட்டத்தில் 1944இல் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது திரு.வீரமணி பத்து வயதுச் சிறுவன்.
இப்போது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். மாணவப் பருவத்தில் எந்த வகுப்பிலும் முதல் அல்லது இரண்டாவது நிலையிலேயே இருப்பாராம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆனர்ஸ் படிப்பில் சேருவதற்கு முதல் பருவக் கட்டணம் கட்டப் பொருளாதார வசதி இல்லை. மிகவும் தயக்கத்துடன் பெரியாருக்கு உதவி கேட்டுக் கடிதம் எழுதினார். எங்கோ சுற்றுப்பயணத்திலிருந்த பெரியார் குறிப்பிட்ட நாளில் கிடைப்பதற்காகத் தந்தி மணியார்டரில் பணம் 95 அனுப்பினார். பின்னர். தேர்வில் முதலாவதாய்த் தேறித் தங்கப் பதக்கத்துடன் அய்யாவிடம் சென்று. நன்றி சொல்லப் போனபோது பெரியார் கூறியது: “அப்படியா? நான் பணம் அனுப்பிச்சேனா? இருக்கலாம். மறந்து போச்சு.”
- குளோஸ் அப் பகுதியில் ‘கல்கி’ ஏடு - 24.6.1979
No comments:
Post a Comment