புதுடில்லி, ஆக. 2- மதிமுக பொதுச் செய லாளர் வைகோ மாநிலங்களவையில் உரையாற்றுகையில், பத்திரிகை சுதந் திரத்தில் இந்தியா 30ஆவது இடம் பிடித்துள்ளதா? அப்படியாயின், இந் தியாவின் மோசமான குறியீட்டுக்கான காரணங்கள் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
அதன் விவரம் வருமாறு:
அ) உலகப் பத்திரிகை சுதந்திர வழிகாட்டுக்கொள்கையின்படி, ஊடக கண்காணிப்பு அமைப்பால் பராமரிக் கப்படும் 180 நாடுகளில், இந்தியா 30 ஆவது இடம்பெற்றுள்ளது உண்மையா?
ஆ) அப்படியானால், பத்திரிகை சுதந்திரத்தில் மோசமான குறியீட்டிற் கான விரிவான காரணங்கள் யாவை?
இ) தேசிய பாதுகாப்புச் சட்டம், தேசதுரோகச் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களின் மூலம் கட்டுப்பாடற்ற அதிகாரங்களைப் பயன் படுத்தி அவர்களது சுதந்திரத்தைப் பறித்து பத்திரிகையாளர்கள் அச்சுறுத் தப்படுகிறார்களா?
ஈ) அப்படியானால், கடந்த மூன்று ஆண்டுகளில், இந்திய அரசு மற்றும் பிரஸ் கவுன்சில்மூலம் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை எவ்வளவு?
உ) புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள், ஆண்டு வாரியாக விவரங்கள் என்ன?
வைகோ எழுப்பிய மேற்கண்ட கேள் விகளுக்கு, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் அளித்துள்ள பதில் வருமாறு:
(அ) மற்றும் (ஆ): உலக பத்திரிகை சுதந்திர வழிகாட்டுக் கொள்கை, 'எல் லைகளற்ற பத்திரிகை செய்தியாளர்கள்' என்ற வெளிநாட்டு அரசு சாரா நிறு வனத்தால் வெளியிடப்பட்டது. மிகக் குறைந்த மாதிரி அளவு, ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் இல்லா நெறிமுறை, கேள்விக்குரிய வெளிப்படையற்ற நெறிமுறை உள் ளிட்ட காரணங்களால் அரசு அதன் கருத்துகளையும் மற்றும் நாட்டின் தரவரிசையையும், முடிவுகளையும் ஏற்க வில்லை .
(இ) முதல் (உ) வரை: பத்திரிகை சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான கொள்கையின்படி, பத்திரிகையின் செயல் பாட்டில் அரசாங்கம் தலையிடாது. பிரஸ் கவுன் சில் ஆஃப் இந்தியா (பிசிஅய்), ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பு ஆகும். பத்திரிகை சுதந் திரத்தை பாதுகாக்க மற்றும் நாட்டில் உள்ள செய்தித் தாள்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்து வதற்கு 1978 ஆம் ஆண்டு பிரஸ் கவுன் சில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு பிரஸ் கவுன்சில் சட்டப் பிரிவு 13 மற்றும் 1979 ஆம் ஆண்டு பிரஸ் கவுன்சில் (விசாரணைக் கான நடைமுறை) விதிமுறைகளின் கீழ் பத்திரிக்கை சுதந்திரம், பத்திரிகையாளர் கள் மீதான உடல் ரீதியான தாக்குதல்/தாக்குதல் போன்றவற்றின்கீழ் பத்திரி கைகள் தாக்கல் செய்த புகார்களை பிரஸ் கவுன்சில் பரிசீலிக்கிறது. 2018-2019 மற்றும் 2020-2021ஆண்டுகளுக்கு இடையில், 66வழக்குகளில் பிரஸ்கவுன் சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
பத்திரிகையாளர்கள் உட்பட நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், சட்டத்தை கையில் எடுக்கும் எந்தவொரு நபரும் சட்டத்தின்படி உடனடியாக தண்டிக் கப்படுவதை உறுதி செய்யவும் உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவ்வப் போது ஆலோசனைகளை வழங்கியுள் ளது. பத்திரிகையாளர்கள்/ஊட கவிய லாளர்கள் போன்றவர்களின் பாது காப்பை உறுதி செய்ய சட்டத்தை கடு மையாக அமல்படுத்துமாறு 2017 அக் டோபர் 20 அன்று மாநிலங்கள்/யூனி யன் பிரதேசங்களுக்கு பத்திரிகையாளர் களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.
-இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment