பாபநாசம், ஆக. 3- நாட்டின் 75 ஆவது சுதந்திரநாளில் புதுச்சேரியில் அமைக்கப் பட்டுள்ள தியாகச்சுவரில் சாவர்க்கர் பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு மனித நேய மக்கள் கட்சி யின் தலைவரும், பாப நாசம் சட்டமன்ற உறுப் பினருமான எம்.எச்.ஜவா ஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதா வது:
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன் னிட்டு புதுச்சேரி கடற்க ரைச் சாலை காந்திதிட லில் சக்ராவிஷன் இந் தியா அமைப்பு சார்பில் தியாகச் சுவர் அமைக்கப் பட்டு வருகிறது. கடந்த ஜூலை 27 அன்று தியா கச்சுவரில் சாவர்க்கர் பெயர்ப் பலகையை ஆளுநர் தமிழிசை திறந்து வைத்துள்ளார். சாவர்க் கர் 9 ஆண்டுகளில், 6 முறை ஆங்கிலேயர்க ளுக்கு மன் னிப்புக் கடிதம் எழுதி யவர்.
இந்தியாவை அடி மைப்படுத்திய பிரிட்டீசா ரிடம் இருந்து ஓய்வூதியம் பெற்ற ஒரே ‘போராளி’ சாவர்க்கர் மட்டுமே. நேதாஜி படைக்கு எதி ராகப் படையை கட்டி யவர். தேசத்தந்தை காந்தி யாரின் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட் டவர் சாவர்க்கர். இந்திய விடுதலைப் போராட்டத் தில் பங்கேற்றதற்காக, அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட பலர் சித்ரவதைகளை அனுப வித்து அங்கேயே உயிர் நீத்தனர். ஆனால் அந்த மான் சிறையில் எல்லா வகையான சலுகைகளை யும் அனுபவித்து, மன் னிப்பு கடிதங்கள் எழுதி விடுதலை பெற்றவர் சாவர்க்கர். இதன் பிறகு ஆங்கிலேய ஏகாதிபத்தி யத்திற்கு விசுவாசமாக நடந்து கொண்டவர் சாவர்க்கர். புதுச்சேரி விடுதலைக்கு சற்றும் தொடர்பில்லாதவர் சாவர்க்கர். அவரது பெய ரைத் தியாகச் சுவரில் பதிப்பது என்பது வர லாற்றுத் திரிபு. எனவே அவரது பெயர் எக்காலத் திலும் அங்குப் பதிவு செய்யப்படலாகாது. இந்த வரலாற்றுத் திரி பைக் கண்டித்துப் போரா டியவர்கள் அனைவரை யும் வழக்கிலிருந்து விடு விக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி யின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
-இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.
No comments:
Post a Comment