பெண்களைத் தாக்கும் ரத்த சோகையும் - தடுக்கும் வழிமுறைகளும்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

பெண்களைத் தாக்கும் ரத்த சோகையும் - தடுக்கும் வழிமுறைகளும்...!

திருமண வயதுடைய பெண்களில் 52 விழுக்காடு பேர் இரத்த சோகையால் பாதிக் கப்பட்டுள்ளனர். ரத்த சோகைக்கான முதன்மை காரணம் இரும்புச்சத்துக் குறைபாடு.

உலக அளவில் 800 மில்லியனுக்கும் அதிகமான பெண்களை ரத்தசோகை நோய் பாதிக்கிறது என்று கணக்கெடுப்புகள் கூறு கின்றன. இந்தியாவில், இது ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சினையாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது, ஏனெனில், திருமண வயதுடைய பெண்களில் 52% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த சோகைக்கான முதன்மை காரணம் இரும்புச்சத்து குறைபாடு.

மிகுந்த சோர்வு, பலவீனம், வெளிறிய தோல், மார்பு வலி, வேகமான இதயத்துடிப்பு அல்லது மூச்சுத் திணறல், தலைவலி, தலை சுற்றல், கை கால்களில் சில்லென்ற உணர்வு, நாக்கில் புண் அல்லது வீக்கம், பலமற்ற உடையக்கூடிய நகங்கள், பசியற்ற உணர்வுஞ் இதுபோன்ற பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று இருந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று அவர் பரிந்துரைக்கும் பரிசோதனை கள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வ துடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் ரத்தசோகை நோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். இறைச்சி, கடல் உணவு, பீன்ஸ், அடர் பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள், கீரைகள், திராட்சை மற்றும் ஆப்ரிகாட் போன்ற உலர்ந்த பழங்கள், இரும்பு செறிவூட்டப்பட்ட தானியங்கள்.. உங் கள் உடல் மற்ற மூலங்களிலிருந்து பெறுவதை விட இறைச்சியிலிருந்து அதிக அளவு இரும் புச்சத்தை உறிஞ்சுகிறது.. நீங்கள் இறைச்சி சாப்பிடாதவராக இருக்கும் பட்சத்தில் தாவர அடிப்படையிலான உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு போன்ற சிட்ரஸ் பழச் சாறுகளில் உள்ள வைட்டமின் ‘சி', உணவில் உள்ள இரும்புச்சத்தை சிறப்பாக உறிஞ்சுவ தற்கு உங்கள் உடலுக்கு உதவுகிறது. ப்ராக் கோலி, திராட்சைப்பழம், கிவி, கீரைகள், முலாம் பழங்கள், ஆரஞ்சு, மிளகு, ஸ்ட்ராபெரி மற்றும் தக்காளியில் வைட்டமின் ‘சி’ ஆனது காணப்படுகின்றது.

No comments:

Post a Comment