அய்யா வணக்கம்.
மானமிகு .மா.சுப்ரமணியன்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.அவர்களுக்கு.
மதுரை மருத்துவக் கல்லூரி வாயிலில் நான்கு கோவில்கள் கட்டப்பட்டு வருகிறது.
இதுபோல் தமுக்கம் மைதானம் சீரமைப் புப் பணியிலும் உள்ளே ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. எந்த ஓர் அரசு அலுவல கங்களிலும் கடவுள் படங்கள் இருக்கக் கூடாது என்பது அரசு ஆணை .
ஆனாலும் பெரும்பாலான அரசு அலு வலகங்களில் பூஜை அறை கூட இருக்கிறது விழாக் காலங்களில் பூஜை நடக்கிறது . தற்சமயம் அறிவியல் மனப்பான்மையில் பாடங்களை சொல்லித் தரும் மருத்துவக் கல்லூரியில் இது போன்ற கோயில்கள் கட்டு வது மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கும் அறிவியல் மனப்பான்மையை குறைப்பதற் கும் வழி செய்யும் - தயவு செய்து நட வடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் எந்த அரசு கட்டடங்களிலும் இது போன்ற மதம் சார்ந்த நடவடிக்கைகள் நடக்காத அள விற்கு சட்ட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தங்களை கேட்டுக் கொள்கிறோம்..
- இரா.சுரேசு. மதுரை மாவட்ட துணை செயலாளர், 9442649928.
---------------
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி நுழைவுவாயிலில் புதிதாக நான்கு சிறிய கோவில்கள் இந்திய மருத்துவ கழக நிர்வாகி கள் முயற்சியில் கட்டப்படுவதாக சொல்லப் படுகிறது.
கல்வி கற்கும் இடத்தில் சட்டவிரோதமாக ஒரு மதம் சார்ந்து இதுபோன்ற பணிகளை தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடை பெற்று வருவதை அரசு சட்டத்தை மீறு வோர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தடுக்கவேண்டும்.
- மதுரை செல்வம்
அமைப்புச் செயலாளர்,
திராவிடர் கழகம்
---------------
அய்யா வணக்கம். மதுரை மருத்துவக் கல்லூரி வாசலில் புதிதாக முளைக்கும்
கோயில்கள் குறித்து அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன்.
- சுப.முருகானந்தம்,
மாவட்டச் செயலாளர், மதுரை மாநகர்
No comments:
Post a Comment