தந்தை பெரியார் அவர்கள் சமூக முன்னேற்றம், பகுத்தறிவு பணி, ஜாதி ஒழிப்பு. பெண்ணுரிமை, இடஒதுக்கீடு போன்ற காரணங்களுக்காக பன்னெடுங்காலமாக நடத்திய மறுமலர்ச்சி நாளேடு ‘விடுதலை’. திருவள்ளுவரின் திருக்குறள் 517இல் சொன்னதுபோல,
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
என்ற வாக்கிற்கு இணங்க, 1962ஆம் ஆண்டில் விடுதலை நாளேட்டின் ஆசிரியர் பணியை அப்போது துடிப்புள்ள இளைஞராயிருந்த திரு கி.வீரமணி அவர்களிடம் தந்தை பெரியார் ஒப்படைத்தார். இன்றைக்கு திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்கள், ‘விடுதலை’ பத்திரிகையின் மூலம், பகுத்தறிவுப் பணியை இடை விடாது 50 ஆண்டு காலம் சூரியனை சுற்றி 51ஆவது சூரிய வட்டப் பாதையில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
விடுதலை மூலம் மக்கள் மத்தியில் இன்றும் நிலவும் வேறுபாடுகளை களைந்து, இந்த நாட்டை ஊக்கப்படுத்தும் முயற்சியில் ஓர் ஒற்றுமையான உணர்வோடு செயல்பட, மக்களை அறிவார்ந்த முறையில் சிந்திக்க வைக்க, பகுத்தறிவோடு இந்த சமுதாயம் மேன்மைபெற, நீங்கள் மென்மேலும் பணி செய்ய உங்களை உளமாரப் பாராட்டி நெடுங்காலம் இப்பணி புரிந்திட வாழ்த்துகிறேன்.
ஆ.ப.ஜெ. அப்துல்கலாம்
(‘விடுதலை’ 26.8.2012)
No comments:
Post a Comment