வழக்குகளை திரும்பப் பெற ஆம் ஆத்மி கட்சியை உடைக்க வேண்டுமாம்! பேரம் பேசிய பிஜேபி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

வழக்குகளை திரும்பப் பெற ஆம் ஆத்மி கட்சியை உடைக்க வேண்டுமாம்! பேரம் பேசிய பிஜேபி

புதுடில்லி, ஆக. 24  ஆம் ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவில் வந்து சேர்ந்தால் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என தம்மிடம் பேரம் பேசப்பட்டதாக டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள் ளார்.

அர்விந்த் கேஜ்ரிவால் தலை மையிலான டில்லி அரசில் துணை முதலமைச்சராக பதவி வகிக்கும் மணிஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளை கவனித்து வரு கிறார். டில்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கி யதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அது பற்றி சிபிஅய்விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந் துரை செய்தார்.

இதன்பேரில் மணிஷ் சிசோடியாவின் வீடு உட்பட 31 இடங்களில் சிபிஅய் அதி காரிகள் கடந்த 20.8.2022 அன்று சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சிசோடியா மற்றும் 3 அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் உள்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர் பாக அமலாக்கத் துறையும் விசாரிக்கமுடிவு செய்துள்ளது. ஆனால் இந்த வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை என ஆம் ஆத்மி கட்சி கூறிவருகிறது.

இந்நிலையில் மணிஷ் சிசோடியா   தனது ட்விட்டர் பதிவில், “ஆம் ஆத்மியை இரண் டாக உடைத்துவிட்டு பாஜக வில் வந்து சேருங்கள், சிபிஅய், அமலாக்கத் துறையின் அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வருகிறோம் என பாஜகவிடம் இருந்து எனக்கு தகவல் வந்துள்ளது.ஆனால் பாஜகவுக்கு எனது பதில் என்னவென்றால் நான் மகாராணா பிரதாப்பின் வழித் தோன்றல். நான்ஒரு ராஜ புத்திரன். நான் என்னையே கூட தியாகம் செய்வேன். 

ஆனால் சதிகாரர்கள் மற்றும் ஊழல் வாதிகளுக்கு முன் தலைவணங்க மாட்டேன். என் மீதான வழக்குகள் பொய்யானவை. நீங்கள் உங்கள் விருப்பம் போல் செய்து கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment