திருச்சி, ஆக. 23- இந்திய நாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப் படையினைச் சேர்ந்த 24 மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியை அனிதா உள்ளிட்ட குழுவினர் பள்ளியின் தோட்டத்திற்கு, மா, பலா, கொய்யா, வேம்பு, புளியங்கன்று, மாதுளை, தேக்கு உள்ளிட்ட மரக் கன்றுகளை மற்றும் மூலிகைச் செடிகளையும் சேர்த்து 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை குறிக் கும் வகையில் 75 மரக் கன் றுகளை பள்ளி முதல்வர் டாக்டர் க.வனிதா அவர் களிடம் வழங் கினார்கள்.
சுற்றுச்சூழல் பாது காப்பின் முக்கியத்துவத் தின் அடிப்படையில் மரம் நடும் செயலை ஊக்குவிக் கும் விதமாக மரக்கன்று கள் வழங்கிய தேசிய பசு மைப்படை மாணவர்க ளையும், அதன் பொறுப் பாசிரியையும் முதல்வர் ஆசிரியர்கள் உள்ளிட் டோர் பாராட்டி மகிழ்ந் தனர்.
No comments:
Post a Comment