புதுடில்லி, ஆக. 4- தேர்தல் நேரத்தில் இலவசங்கள் குறித்துச் சிறப்பு ஆலோசனைக் குழு அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது
அரசியல் கட்சிகள் தேர்தல் தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்குத் தடை விதிக்க கோரி ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது தலைமை நீதிபதி ரமணா, ”நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதத்தை ஒன்றிய அரசால் நடத்த இயலாமல் போகலாம். உண்மையில் எந்த ஒரு அரசியல் கட்சிகளும் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு விரும்பாமல் இல்லை. இது முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஆகவே இந்த விவகாரம் குறித்து நிபுணர்களைக் கொண்ட சிறப்பு குழு அமைத்து நல்ல முன் வடிவுகளை கொண்டு வரலாம்’’ என கருத்து தெரிவித்தார்.
இதை ஏற்பதாக தெரிவித்த ஒன்றிய அரசு தரப்பு வழக்குரைஞர், ”இத்தகைய இலவச அறிவிப்புகள் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும். மேலும் இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் யோசனையுடன் செயல்பட வேண்டும். ஆகவே நிபுணர் குழு அமைக்கலாம் என்ற நீதிமன்றத்தின் யோசனை ஏற்புடையது’’ எனத் தெரிவித்துள்ளார்
இந்த சிறப்புக் குழுவில், எதிர்க்கட்சிகள், ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், நிதி குழு சட்ட ஆணையம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு தலைமை நீதிபதி தெரிவித்தார். இதை அடுத்து இவ்வழக்கு வரும் திங்கட் கிழமைக்கு (8.8.2022) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment