புதுடில்லி, ஆக.25 என்.டி.டி.வி.யின் மேலும் 26 சதவீத பங்குகளை வாங்குவதற்கு அதானி குழும நிறுவனங்கள் முன்வந்துள்ளது குறித்த செய்தி வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது,
டில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிற என்.டி.டி.வி.யின் 30 சதவீத பங்குகள், ஏற்கெனவே அதானி குழும நிறுவனங்களிடம் உள்ளன. இந்த நிலையில் என்.டி.டி.வி.யின் மேலும் 26 சதவீத பங்குகளை ரூ.493 கோடிக்கு வாங்குவதற்கு அதானி குழும நிறுவனங்கள் முன்வந்து வெளிப்படையாக அறிவித்துள்ளன. இந்த 26 சதவீத பங்குகள் அதானி குழும நிறுவனங்கள் வசம் சென்று விட்டால், 56 சதவீத பங்குகளுடன் என்.டி.டி.வி.யின் பெரும்பான்மை பங்குதாரராக அதானி குழும நிறுவனங் கள் மாறி விடும். என்.டி.டி.வி.யின் பங்கு மதிப்பு இந்த ஆண்டில் மட்டுமே 300 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந் துள்ளது. நேற்றைய இதன் விலை ரூ.366.20 ஆகும்.
மோடி அரசின் செயல்பாடுகளை வட இந்தியாவில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கும் ஒரே ஒரு செய்தி நிறுவனம் என்.டி.டி.வி. ஆகும் தற்போது அந்த நிறுவனத்தை மோடியின் நெருங்கிய நண்பரான அதானி வாங்க இருப்பதால், வரும் காலங்களில் வட இந்திய செய்தி நிறுவனங்கள் அனைத்துமே பாஜவின் அதிகாரப்பூர்வமற்ற செய்தி தொடர்பு நிறுவனங்களாக மாறிவிடும்.
No comments:
Post a Comment