சென்னை, ஆக. 9- இணைய விளையாட்டுகளை தடை செய்வது தொடர் பாக வரும் 12ஆம் தேதிக் குள் பொதுமக்கள் தங் கள் கருத்துகளை மின் னஞ்சல் மூலம் அனுப்ப லாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு உள்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு. சமீபகாலங்களில், இணைய சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். வரன்முறையற்ற இணைய விளையாட்டு களால் கற்றல் குறைபாடு கள், ஒழுக்கக் குறைபாடு கள் ஏற்படுவதாகவும் அர சுக்கு தெரியவந்துள்ளது.
எனவே, இணைய விளையாட்டுகள் தொடர் பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக, தமிழ்நாடு அரசுக்கு பரிந் துரைகள் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு தலை மையில் ஒரு குழு அமைக் கப்பட்டுள்ளது.
அக்குழுவின் அறிக்கை, அரசின்பரிசீலனையில் உள்ளது. இணைய விளையாட்டுகளை தடைசெய்வது தொடர் பான கருத்துகளைத் தெரி விக்க விரும்பும் பொது மக்கள், பெற்றோர், ஆசிரி யர்கள், மாணவர்கள், இளையதலைமுறையினர், உளவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற் றும் இணைய விளை யாட்டு நிறுவனங்களிடம் இருந்து கருத்து கேட்க அரசு முடிவெடுத்துள்ளது.
எனவே, இணைய விளையாட்டுகளை தடை செய்வது, ஒழுங்கு படுத்துவது தொடர்பான கருத்துகளை ‘homesec@tn.gov.in’ என்ற மின்னஞ்சல் முகவரியில் வரும் 12-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.
மேலும், இணைய விளையாட்டுகள் பற்றிய கருத்துகளை நேரடியா கப் பகிர விரும்பும் நிறு வனங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந் தித்து தங்கள் கருத்து களைத் தெரிவிக்க இன்று (ஆக. 9) மாலை5 மணிக் குள் தங்களது வேண்டு கோளை மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
கருத்து கேட்பு கூட் டம் வரும் 11ஆம் தேதி மாலை 4 மணி முதல் நடைபெறும். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தனி நேரம் ஒதுக்கப்படும். நிறு வனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டும்பங்கேற்கலாம்.
-இவ்வாறு அந்த செய் திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment