செய்தியும் - சிந்தனையும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

செய்தியும் - சிந்தனையும்!

கேள்வி: தமிழ்நாடு என்று அண்ணாதுரை முதலில் பெயர் வைத்ததாகச் சொல்லும் ஸ்டாலின், “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாரதியாரை மறந்தது ஏன்?

பதில்: ஸ்டாலினுக்குப் பாரதிதாசனைத் தான் தெரியும். பாரதிதாசனுக்குத்தான் பாரதியார், ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே‘ என்று எழுதினார் என்று தெரியும்.

- (துக்ளக், 10.8.2022 பக். 28)

ஸ்டாலினுக்குப் பாரதிதாசனைத் தெரியும், குருமூர்த்திகளுக்குப் பாரதியாரைத் தெரியும் - இதுதான் திராவிடம் - ஆரியம் என்ற வேறுபாடு.

“தமிழியக்கத்தில்” பார்ப்பனரை வெளுத்துக் கட்டினார் பாரதிதாசன் அதில் பாரதி விதிவிலக்கல்ல.

எந்த அளவுக்கு குருமூர்த்தி பார்ப்பனர்களுக்கு பார்ப்பன வெறி தலை கொழுத்து நிற்கிறது தெரியுமா?

“பாரதியார் ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடவில்லையாம்.

(‘துக்ளக்‘, 4.11.2020 - பக். 25)

இருக்கட்டும் 

“சூத்திரனுக்கொரு நீதி தண்டச்சோறுண்ணும் 

பார்ப்புக்கொரு நீதி 

சாத்திரம் சொல்லிடுமாயின் 

சதியெனக் கண்டோம்“

என்று பாரதி பாடவில்லை என்று குருமூர்த்தி அய்யர்கள் எடுத்துச் சொன்னாலும் சொல்லுவார்கள்.

- - - - -

கல்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக் காகத்தையென் செயப்படைத்தாய்?

- ‘விவேகசிந்தாமணி', பாடல் எண் 82


No comments:

Post a Comment